மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
15 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
15 hour(s) ago
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுர தகர்ப்பின், 10வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, சிறு ரக விமானங்கள் மீது, அல்-குவைதா தாக்குதல் நடத்தலாம் என, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள், 2001, செப்டம்பர் 11ல், அல்-குவைதா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. அதன், 10வது ஆண்டு நினைவு நாள், வரும், 11ம் தேதி அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கர்கள், கவனத்துடன் இருக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, நாட்டின் உள்பகுதியில் இயங்கி வரும் சிறு ரக விமானங்கள் மீது, அல்-குவைதா தாக்குதல் நடத்தலாம் என, உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago