உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆடுகளத்தில் உயிரிழந்த 17 வயது பாட்மின்டன் வீரர்

ஆடுகளத்தில் உயிரிழந்த 17 வயது பாட்மின்டன் வீரர்

ஜகார்தா: பாட்மின்டன் விளையாடி கொண்டிருந்த 17 வயது சீன வீரர் ஆடுகளத்திலேயே மாரடைப்பால் உயிரிந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது. ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தோனோஷியாவின் யோகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ம் தேதியன்று நடைபெற்ற போட்டியில் சீனாவை சேர்ந்த 17 வயது வீரர் ஜாங் ஜிஜி என்பவரும், ஜப்பானின் கசுமா கவானோவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது ஜாங் ஜிஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, ஆடுகளத்திலேயே சுருண்டு விழுந் விழுந்தார். சர்வதேச போட்டிகளின விதிகளின் படி நடுவரின் உத்தரவு வரும் வரையில் யாரும் ஆடுகளத்தின் நடுவே செல்லகூடாது. இதனால் சுருண்டு விழுந்த வீரரின் அரு்கில் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. தொடர்ந்து நடுவரின் உத்தரவையடுத்து உடன் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளம் வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை