உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று (30.04.2024) பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரிட்டன் மன்னர் இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் அவரது மகனும் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூடிக்கொண்டார். கடந்த பிப்ரவரியில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுநீர் குழாய் பாதையில் பிராஸ்டேட் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து அரண்மனை திரும்பினார்.கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நலன் குறித்து தவறான தகவல் பரவியது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வட்டாரம் மறுத்தது.இந்நிலையில் முதல் பொது நிகழ்ச்சியாக இன்று (30.04.2024) லண்டனில் புற்று ஆராய்ச்சி மையத்திற்கு சென்று அங்குள்ள மருத்துவர்கள், ஊழியர்களை சந்தித்தார். அவருடன் மனைவி கமீலாவும் சென்றார். இதன் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. வரும் ஜூனில் ஜப்பான் மன்னர் பிரிட்டன் வருகை தருகிறார். அவரை சந்திக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை