உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை... உலக நாடுகள் தலையிட மகன் கோரிக்கை

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை... உலக நாடுகள் தலையிட மகன் கோரிக்கை

இஸ்லாமாத்: சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமில்லை என்று அவரது மகன் காசிம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி, தனிமை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் முயன்றபோதும், பாக்., அதிகாரிகள் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. இதை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டது.இதனிடையே, சமூக ஊடகங்களில் அடியாலா சிறையில் இம்ரான் கான் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தன்னுடைய தந்தை உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 6 வாரத்திற்கு மேலாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் நிலை குறித்து பாகிஸ்தான் அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. குடும்பத்தினரை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். என்னுடைய தந்தையை கைது செய்து 845 நாட்கள் ஆகின்றன. கடந்த 6 வாரங்களாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், இம்ரான் கானின் சகோதரிகள் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இது பாதுகாப்பு நடைமுறை அல்ல, ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. தார்மீக ரீதியாக இம்ரான் கானைப் பற்றி அரசு பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் தலையிட வேண்டும், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
நவ 28, 2025 10:27

சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், ஜவகொரில்லா, மற்றும் பல இந்துவிரோதிகளை உடனடியாக பாக்கிஸ்தான் அனுப்பி தேடச் சொல்லவும்.


duruvasar
நவ 28, 2025 10:04

இங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு பாகிஸ்தானிலிருந்து கருது போடும் கர்மவீரர்கள் இதை பற்றி எந்த கருத்தும் வெளியிடாமல் பதுங்கு குழிக்கு போனது என்னோ ?


Sun
நவ 28, 2025 10:01

லண்டனில் கல்வி பயின்ற மிகச் சிறந்த ஜென்டில் மென் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இவரோட சம காலத்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், வாசிம் அக்ரம் இவர்களைப் போல ஓய்வுக்குப்பின் கிரிக்கெட் கமெண்டரி, மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்காமல் பாகிஸ்தான் எனும் நாட்டை திருத்த முயன்றார். இந்தியாவில் பலவீனமான ஆட்சி இருந்தால்தான் நல்லது தீவிரவாதிகளை வைத்து நாம விளையாடலாம் என எப்போதும் எண்ணும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மத்தியில் இம்ரான் பிரதமராக இருந்த போது இந்தியாவில் பலமான ஆட்சி இருந்தால் மட்டும்தான் இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையை பேசி தீர்க்க முடியும் என உறுதியான அறிக்கை விட்டவர். அந்த வகையில் மோடியின் ஆட்சியே இந்தியாவில் தொடர வேண்டும் என விரும்பியவர் இம்ரான். அவர் உயிருடன் இருந்தால் இந்தியாவிற்கு நல்லது.


சூர்யா
நவ 28, 2025 09:48

உலகின் எல்லா நியாயங்களும் பேசுவார் இதற்கெல்லாம் டிரம்பர் வாயைத் திறக்க மாட்டார். ஏனெனில் இன்றைய பாகிஸ்தானை ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள் டிரம்பரின் நெருங்கிய கூட்டாளிகள்.


R. SUKUMAR CHEZHIAN
நவ 28, 2025 09:46

இது தான் இஸ்லாமிக் ரிப்பப்ளிக் ஆப் பாகிஸ்தான். I am sorry Imbran Khan.


Veeraa
நவ 28, 2025 09:29

Why world organizations should interfere? Why not Muslim countries especially Saudi Arabia or Turkey?


N.Purushothaman
நவ 28, 2025 09:24

முல்லா முனீர் இம்ரான் கானை என்னமோ பண்ணிட்டான் ....இந்தியாவுல இருக்குற கழிசடைகள் ஐ லவ் பாகிஸ்தான் க்ருப்பு இப்போ இதுக்கு வாயை தொரப்பானுங்களா ?


s vinayak
நவ 28, 2025 10:17

ஆடிய ஆட்டம் என்ன?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை