உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் குறித்து உக்ரைன் அதிபருடன் பிரதமர் ஆலோசனை: ஜெய்சங்கர் தகவல்

போர் குறித்து உக்ரைன் அதிபருடன் பிரதமர் ஆலோசனை: ஜெய்சங்கர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' உக்ரைனில் அமைதிக்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்க அனைத்து நட்டு நாடுகளுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் '', என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது , விவசாயம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=65rmky78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகு நிருபர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: பிரதமர் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது. பிரதமர் மோடிக்கும், அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதி இரு தரப்பு உறவுகளுக்காக அமைந்தது. கல்வி, விவசாயம், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை மீண்டும் கட்டமைக்க, குழு அமைக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.உக்ரைன் போர் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமைதிக்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்க அனைத்து நட்பு நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். விரைவாக அமைதி ஏற்பட தேவையான பங்களிப்பை இந்தியா வழங்க தயாராக உள்ளது என்ற நிலைப்பாட்டை மோடி மீண்டும் உறுதி செய்தார்.மோதலின் விளைவுகள் குறித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Yaro Oruvan
ஆக 23, 2024 23:04

எங்க டுமிலின தானைத்தலைவர் முத்தமிழ்வித்தவர் மட்டும் இந்நேரம் உசுரோட இருந்திருந்தா பீச்சுல மூணு மணி நேரம் உண்ணா விரதம் இருந்து போரை நிப்பாட்டீருப்பாரு.. இவிங்க என்ன இப்டி ஜவ்வா இழுக்குறானுவ.. டுமிழினம் உங்க காமெடி லீலைகள ரொம்ப மிஸ் பண்ணுது தலீவா


அப்பாவி
ஆக 23, 2024 18:44

அங்கே நிலைமை, பிரச்சனையே வேற. உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாதுன்னு ரஷ்யா பிடிவாதமா இருக்கு. உக்ரைன் நேட்டோவில் சேர விரும்புகிறது. இதில் ஏதாவது ஒண்ணுதான் நடக்கும். பூட்டினுக்கு இந்தப் போர் நடந்தால்தான் பாதுகாப்பு. ஜலன்ஸ்கிக்கு நேட்டோவில் இருப்பதுதான் பாதுகாப்பு. நடுவில் ரெண்டு பக்கமும் நட்பா இருந்து என்ன அழைப்பு விடுத்தாலும் நம்ம நாளிதழ்களில் தலைப்புச் செய்தி போடத்தான் லாயக்கு. மத்தபடி கறிக்கு உதவாது. சீனாவின் , இந்தியாவின் ஆதரவு இருக்குற வரை புட்டின் ஓட்ட முடியும். அமெரிக்கா நம்ம மேலே காண்டா இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத நிலைமை. முதலில் சீனாவை வீக்காக்குற வேலையில் இருக்காங்க. மொத்தத்தில் புட்டின் மண்டையப் போடுற வரையில் தான் இதெல்லாம். நம்மளை யாரும் சீரியசா எடுத்துக்கற மாதிரி தெரியலை.


Hari
ஆக 23, 2024 19:43

Appavi.... you comments coming as kottavi......


veeramani hariharan
ஆக 23, 2024 18:29

Modi will take initiative for ceasefire. But EU will not allow as their total GDP of Ammunition, Medicine and Finance aid will fall if war is stopped


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை