மேலும் செய்திகள்
பெலகாவி ஹிண்டல்கா சிறைக்கு பிரஜ்வல் ரேவண்ணா மாற்றம்
1 hour(s) ago
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு சிறை
1 hour(s) ago
வீட்டின் முன் வாகனங்களை நிறுத்த கட்டணம் கிடையாது
1 hour(s) ago
- நமது நிருபர் - சப்பாத்தி, ரொட்டிக்கு சென்னா மசாலா, கிரேவி வைத்து சாப்பிட்டு இருப்போம். அதேபோல், தயிர் மசாலா கறியும், சப்பாத்தி, ரொட்டிக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். இதை வெறும் 10 நிமிடங்களில் செய்து விடலாம். தேவையான பொருட்கள்
l நன்கு கடைந்த தயிர் -அரை லிட்டர் l பொடியாக நறுக்கிய -ஒரு வெங்காயம் l பச்சை மிளகாய் -இரண்டு l பூண்டு -15 பற்கள் l காஷ்மீரி மிளகாய் துாள் மூன்று டீஸ்பூன் l மஞ்சள் துாள் கால் டீஸ்பூன் l தனியா துாள் - ஒரு டீஸ்பூன் l சீரக துாள் - ஒரு டீஸ்பூன் l கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன் l பெருங்காய துாள் - கால் டீஸ்பூன் l கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லி தழை தேவையான அளவு செய்முறை
சிறிய உரலில் பூண்டு, காஷ்மீரி மிளகாய் துாள் சேர்த்து, கொரகொரப்பாக இடித்து, தனியாக எடுத்து கொள்ளவும். கடைந்த தயிரை எடுத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காய துாள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள், தனியா, சீரக துாள், தேவையான உப்பு, இடித்து வைத்துள்ள பூண்டு மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலாக்கள் கருகாமல் இருக்க தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இப்போது அடுப்பை முற்றிலும் அணைத்து விட்டு, கடைந்து வைத்துள்ள தயிரை, கடாயில் ஊற்றி மசாலாவுடன் நன்கு கலந்து விடவும். அடுப்பை அணைக்காமல் தயிர் சேர்த்தால் தயிர் திரிந்து விடும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை துாவி இறக்கினால், சுவையான தயிர் மசாலா கறி ரெடி.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago