உள்ளூர் செய்திகள்

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

அப்பா எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காரு; அவரை எதிர்த்து என்னால ஒன்னும் பேச முடியலை; எதுவுமே பேச மாட்டீங்களா... யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு கூட கேட்க மாட்டீங்களா சூர்யா? யாரை கல்யாணம் பண்ணிக்கப் போற சுப்பு? அவரு... மூளைக்காரர்! அவன் மூளைக்காரன்னு எப்படிச் சொல்றே? 'கட்சியோட பொதுச்செயலர் அறிவிச்சமாதிரி பகல் 12:00 மணிக்கு கரூருக்கு வர வேண்டிய த.வெ.க., தலைவர், இரவு 7:00 மணிக்குதான் வந்தார்'னு முதல்வர் தந்த விளக்கத்துக்கு, 'இது, 'நிகழ்ந்த கோர சம்பவத்துக்கு காரணம் ஜோசப் விஜயோட தாமதம்'னு புரிய வைக்கிற மாதிரி இல்ல; ஏழு மணி நேரம் தாமதமா வந்த தலைவனுக்கு பெருகி நின்ன மக்கள் செல்வாக்கை சொல்ற மாதிரி இருக்கு'ன்னு சொன்னார்! சரி... போ... ஏன் நிற்கிறே; போ... போய் அந்த மூளைக்காரனையே கல்யாணம் பண்ணிக்கோ! அவரு இன்னொன்னும் சொன்னாரு; கூட்ட நெரிசல்ல சிக்குனவங்க உதவி கேட்குறதைப் பார்த்து ஆம்புலன்ஸுக்கு போலீஸ் போன் பண்ணினதா முதல்வர் சொன்னாரு இல்லையா... ஆமா... அதுக்கென்ன? இல்ல... 'தண்ணீர் கேட்குறதுக்காக த.வெ.க., தலைவரை நோக்கி செருப்பு வீசியிருக்கலாம்னு முதல்வர் சொல்றாரே... போலீஸ்கிட்டே ஆம்புலன்ஸுக்கு உதவி கேட்ட மக்களுக்கு, அதே போலீஸ்கிட்டே தண்ணீர் கேட்கணும்னு ஏன் தோணலை'ன்னு கேட்டாரு; 'திங்க் அபவுட் இட்'னு வேற சொன்னாரு! இதானே உனக்கு வேணும்; வெள்ளையா ஒரு தோலு; நாலு வார்த்தை இங்கிலீஷ்ல பேசணும்; அவ்வளவுதானே... போ... போய் அவனையே கல்யாணம் பண்ணிக்கோ! ஆங்... அவரு கடைசியா என்ன சொன்னா... என்ன... 'கருணாநிதி மட்டும் முதல்வரா இருந்திருந்தா, எப்பேர்பட்ட கூட்டமும் சின்ன கும்பலா தெரியுற அளவுக்கு பிரமாண்ட இடத்தை ஒதுக்கி கொடுத்து, 'ஜோசப் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இல்லை'ன்னு புரிய வைச்சிருப்பாரு'ன்னு அரசியல் பேசுனானா? ஆமா... ஆனா இவ்வளவும் சொன்னவரு, 'யாருக்கு நீங்க ஓட்டு போடுவீங்க'ன்னு நான் கேட்டதுக்கு, 'உன் சூர்யா நொந்து போய் நிற்கிறப்போ கூர்ந்து பார்... பின்னால தெரியும்'னாரு; ப்ளீஸ்... கொஞ்சம் அப்படி நிற்கிறீங்களா? நான் உனை நீங்க மாட்டேன்... நீங்கினால்... துாங்க மாட்டேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !