முதல்வரே... ஒரு நிமிஷம்!
செய்தி: ஓட்டுப் போட வரிசையில் நிற் கையில் உயிரிழந்த விதவை தாய்! அநீதி: குழந்தைகளுக்கு உதவி கேட்கும் பாட்டியை மன்றாட வைக்கும் அரசு! அரசே... நான் முருகம் மாள்; ஏப்ரல் 19, 2024 பார்லிமென்ட் தேர்தல் ஓட்டு மையத்தில், எனது மருமகள் சாந்தியை பறி கொடுத்து 13 வயது, 11 வயது பெண் குழந்தை களோடு பரிதவித்து நிற்கும் பாட்டி! ராமநாதபுரம், வேதாளை, குஞ்சார்வலசை கிரா மத்து மீனவ குடும்பத் தைச் சேர்ந்த என் மருமகள், கிராம பஞ்சா யத்து சார்பில் ஓட்டு சீட்டு தரும் தன்னார் வலராக அன்று இருந்தாள். ஓட்டுச் சாவடி எண்: 248ல் தன் ஓட்டை பதிவு செய்ய வரிசைக்கு வந்தவள் திடீரென மயங்கி சரிய, அன்றிரவே மரணம்! மண்டபம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. இறுதிச் சடங்கிற்காக 10 ஆயிரம் ரூபாய் நிதி தந்தது கிராம நிர்வாகம். ரூ.50 ஆயிரம் தந்து ஆறுதல் சொன்னார் அ.தி.மு.க., எம்.பி., தர்மர். என் கணவரும், மகனும் உயிரிழந்த சூழலில், பேரக்குழந்தைகளின் எதிர் காலத்திற்கு உதவி கேட்டு, மருமகள் இறந்த மறுநாளே ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, மே 29 மற்றும் ஜூன் 28, 2024 தேதியிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கையொப்பமிட்ட கடிதங்கள் கிடைத்தன; அவ்வளவுதான்! ஆக... மனுவுக்கு பதில் கடிதம் அனுப்பி விட்டால் மக்கள் துயரம் தீர்த்ததாக அர்த்தம்; அப்படித்தானே அரசே?