ஏழரை கேள்விகள்
வி.சி., தலைவர் திருமாவளவனிடம் பதில் கேட்கிறது தமிழகம்...01. 'ஆட்சியில் எம்.ஜி.ஆர்., இருந்தபோது அவரை துணிச்சலோடு விமர்சித்தவர்' என்று பழனி பாபாவை போற்றும் நீங்கள், தி.மு.க., ஆட்சி யில் ஈ.வெ.ரா.,வை விமர்சிக்கும் சீமானிடம் துணிச்சல் உள்ளதாக ஏற்பீர்களா?02. 'அம்பேத்கர் பற்றி பேசினால் அவன் தலித் என்பது இந்திய அரசியலின் சாபக்கேடு' என வருந்தும் உங்களுக்கு, 'நம் பிரதமரின் ஆளுமையை பேசுபவன் சங்கி' எனும் கோஷத்தில் வருத்தமுண்டா?03. 'அதிகாரத்தை கேட்கும் போதுதான் தீண்டாமை எழுகிறது' என்கிறீர்களே... தீண்டாமையை ஒழிக்க பாடுபடும் நீங்கள், ஆளும் தி.மு.க.,விடம் அதிகாரத்தில் பங்கு கேட்காதது நகைமுரண் அல்லவா?04. 'சான்றிதழ்படி இந்துவான நான் இந்துமத குற்றம் குறைகளை சுட்டிக்காட்டுவேன்' என்று நீங்கள் சொன்னதுபோல், 'ஈ.வெ.ரா.,வை போற்றிய எனக்கு விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது' என்று சீமான் சொன்னால் உங்களது பதில்?05. ஆசி பெறச்சென்ற அண்ணாதுரையிடம், 'என்னை கூச்சப்பட வைத்து விட்டீர்கள்' என்றாராம் அவரை எதிர்த்த ஈ.வெ.ரா.; தங்களால் தண்டிக்கப்பட்டும் ஆசி பெற ஆதவ் அர்ஜூனா வந்தபோது உங்கள் மனநிலை என்ன?06. 'தி.மு.க., ஆட்சியில் நான் முதல்வர்; எனது வாரிசு துணை முதல்வர்' எனச் சொல்லி மு.க.ஸ்டாலின் ஓட்டு கேட்காத நிலையில், 'வாரிசு அரசியல் கட்சி சார்ந்த விஷயம்' எனும் உங்களது வாதம் நேர்மையானதா?07. வேங்கைவயல் மக்களுக்காக, 'கூட்டணி முறிவு' எனும் புது பல்லவி உண்டா அல்லது 'கொள்கை பகைவர்களை வீழ்த்த தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்' எனும் பழைய பல்லவிதானா?7½ 'சுயமரியாதை' என்றால்...?