உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ரொம்ப ஈஸி... பராமரிப்பு செலவு குறைவு!: சொல்கிறார் சிவஞானம்

ரொம்ப ஈஸி... பராமரிப்பு செலவு குறைவு!: சொல்கிறார் சிவஞானம்

'நாம ஜெயிச்சிட்டோம் மாறா'-ங்கற டயலாக் ஒலிக்க, 'தி சேம்பியன்'ங்கற பட்டத்தோட, மெடல் தொங்க போஸ் கொடுக்குற ஒரு சிப்பிப்பாறை வீடியோ, சோசியல் மீடியாஸ்ல வைரலாகிட்டு இருக்கு. இதோட புரொபைல் பார்த்து தொடர்பு கொண்டோம்.அவர் பெயர் சிவஞானம். நாட்டு நாய்களை பற்றி கேட்டதும், துடிப்போடு பேச ஆரம்பித்தார்.'' டாக் ஷோ பாக்குறதுக்குன்னே ஊர் ஊரா சுத்துவேன். நிறைய பாரின் டாக்ஸ் தான், அங்க வரும். டைட்டில் வின் பண்ணும். ரொம்ப குறைவா தான் நாட்டு நாய்களோட என்ட்ரீஸ் இருக்கும். இதை அதிகரிச்சு, டைட்டில் அடிக்கணும்னு நினைச்சேன். நாட்டு நாய்களுக்கு ட்ரைனிங் கொடுக்க, நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். கடந்த 10 வருஷத்துல, 50 சேம்பியன்ஸ உருவாக்கியிருக்கேன். இப்போ இண்டியன் ப்ரீட்ஸ்க்குன்னு, தனியா போட்டியே நடத்த ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றார்.

ஓ..!, அவ்ளோ வரவேற்பு இருக்கா?

இருக்குங்க... நாட்டு நாய்களை வளர்க்கறது ரொம்ப ஈஸி. பராமரிப்பு செலவும் குறைவு. அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, ரொம்ப எனர்ஜியா இருக்கும். சமீபத்துல கூட சென்னையில, இன்டர்நேஷனல் டாக் ஷோ நடந்துச்சு. இதுல, நாட்டு நாய்களுக்கு, ஸ்பெஷலா போட்டி நடத்துனாங்க. கர்நாடகா, உத்திரபிரதேசம், பஞ்சாப்-னு நிறைய மாநிலங்கள்ல இருந்து, 90 டாக் என்ட்ரீஸ் வந்துச்சு. இதுல, நம்ம ஊரு ராஜபாளையம் டாக் தான், மெடல் வாங்குச்சு.

டாக் ட்ரைனிங் பத்தி?

வீட்டுல வளர்க்குற டாக்ஸ்னா, பேசிக் ட்ரைனிங் போதும். ஷோ என்ட்ரீ ஆகணும்னா, ப்ரீடுக்கு ஏத்தமாதிரியான பர்ப்பெக்ட் அனாடமி ஸ்ட்ரக்ச்சர், பைட்ஸ், லெக்ஸ், டெய்ல் லென்த் இருக்கணும். யாரையும் கடிக்க கூடாது. ட்ரைனரோட ஆர்டருக்கு உடனே ரியாக்ட் பண்ணணும். ஜட்ஜ் சொல்ற போஸ்லாம் செய்யணும். சேலஞ்ச் ரவுண்ட்ல, 4 சர்டிபிகேட் வாங்குனா தான், சேம்பியன் ரவுண்டுக்கு, செலக்ட் ஆகும். இதுவரை, 50 இண்டியன் சேம்பியன்ஸ் உருவாக்கியிருக்கேன். நிறைய பேருக்கு, டாக்ஸ் ட்ரைனிங் கிளாஸ் எடுக்குறேன், என்றார். பேசிக் கொண்டிருக்கும் போதே, ராஜநடையில், கம்பீரமாய் வந்தது ஒரு கோம்பை. ' அடுத்த சேம்பியன் இவன் தான்'னு சொல்லிட்டு, லீஸ்ஸ கையில் எடுத்தார் சிவஞானம். நாங்கள் விடைபெற்றோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை