''ஒத்த ஆளா நின்னு, தோட்டத்தை காவல் காப்பான். இவனோட கண்ணுல இருந்து யாரும் தப்ப முடியாது. புலி மாதிரி சீறுனாலும் ஓனரை பார்த்துட்டா, பசு மாதிரி வாலை ஆட்டிட்டு நிப்பான்,'' என, தெலுங்கு நடிகர் பாலய்யா படம் ரேஞ்சுக்கு, அடுக்கடுக்கான பஞ்ச் டயலாக்கால், நம் புருவங்களை விரிய செய்தார், கோவை, சூலுாரை சேர்ந்த 'புல்லிக்குத்தா ப்ரீடர்' சிவசுப்பையா.புல்லிக்குத்தாவோட ஸ்பெஷாலிட்டி என்ன என்றதும், ஆர்வமாய் பகிர்ந்தார். ''புல்லிக்குத்தா ப்ரீட், ராஜாக்கள் காலத்துல இருந்து இருக்குது. தஞ்சாவூர் தான் இதோட பிறப்பிடம்னு சிலர் சொல்றாங்க. பாகிஸ்தான்ல டாக் பைட்டுக்கு, இந்த ப்ரீட பயன்படுத்துறாங்க, அந்த நாட்டு ப்ரீடுனும் சொல்றதால, இதோட பூர்வீகம் பத்தி, சரியான தகவல் இல்ல. ஆனா, இதை போர், வேட்டை, சண்டை, காவலுக்கு தான் அதிகம் பயன்படுத்தியிருக்காங்க.கிட்டத்தட்ட 90 செ.மீ., வரைக்கும் வளரும், ஜைஜான்டிக்கான ப்ரீட். இதோட ஸ்கின் ஸ்மூத்தா இருக்கறதால, பராமரிப்புக்கு மெனக்கெட வேண்டாம். பிளாக், பிரவுன், ஒயிட்-னு சில யுனிக் கலர்ஸ்ல இருக்கும். லார்ஜ் டைப் ப்ரீட்ங்கறதால, புரோட்டீன் ரிச் புட் தான் கொடுக்கணும். டெய்லி மார்னிங், ஈவினிங், வாக்கிங் கூட்டிட்டு போறது, அதோட டைம் ஸ்பென்ட் பண்றது அவசியம்,'' என்றார்.
யாரெல்லாம் இந்த ப்ரீட் வாங்கலாம்?
தோட்டம், பண்ணை வீடு வச்சியிருக்கவங்க, இந்த ப்ரீட் வாங்குனா, செக்யூரிட்டிக்கு கவலைப்பட வேண்டியதில்ல. நான், 2018ல, பஞ்சாப்ல இருந்து ஒரு புல்லிக்குத்தா வாங்குனேன். என் தோட்டம், மாடு, சேவல், கோழிக்கு, இதுதான் காவல். பாம்பு வந்தா கூட சத்தம் போட்டு காட்டி கொடுத்துடும். இதை மீறி, யாரும் உள்ள வர முடியாது.ரொம்ப பாதுகாப்பா இருக்கறதால, நிறைய பேர், இந்த ப்ரீட் வேணும்னு கேட்டாங்க. இதனால தான், ப்ரீடிங் பீல்டுக்குள்ள வந்தேன். இப்போ, 95 பப்பி சேல் பண்ணியிருக்கேன். என்கிட்ட பப்பி வாங்குறவங்களுக்கு, இதோட மெயின்டனென்ஸ் பத்தி கவுன்சிலிங் கொடுத்துடுவேன்.பாக்குறதுக்கு புலி மாதிரி துடிப்பா இருந்தாலும், ரொம்ப பிரெண்ட்லி. என்கிட்ட இண்டியன் சேம்பியன் டாக்ஸ் இருக்கறதால, யுனைடெட் கென்னல் கிளபோட, சர்டிபிகேட்டும் வச்சிருக்கேன், என காலரை துாக்கிவிட்டார், சிவசுப்பையா.