உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / வீட்டிலேயே குரூமிங்: மதன் டிப்ஸ்

வீட்டிலேயே குரூமிங்: மதன் டிப்ஸ்

''உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா... வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா''-னு பீல் பண்ணி பாடுற அளவுக்கு குரூமிங் முடிஞ்சதும், ஷைனிங்கா பொம்மை மாதிரி, அழகா மாறிடுச்சு ஒரு பூடில்.சோசியல் மீடியால பார்த்த, அந்த வீடியோவோட புரொபைல்ல, அட்ரஸ் தேடி நாங்க சென்ற இடம், கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்த, 'பா டிரண்ட்ஸ்'. அதன் உரிமையாளர் மதனுடன் ஓர் சந்திப்பு: 'குரூமிங் ஸ்பா'க்கு செலவு பண்றது அவசியமா, ஆடம்பரமா?நம்மை அழகுப்படுத்திக்கறதுக்கு பார்லர் போற மாதிரி தான் பெட்ஸ சுத்தப்படுத்தி, அழகுப்படுத்துறதுக்கு குரூமிங் ஸ்பா இருக்குது. பிசினஸ், ஒர்க்-னு பிசியா இருக்கறவங்க, பெட்ஸோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. இதை குளிப்பாட்டாம, ஹேர்கட் பண்ணாம இருந்தா, ஹெல்தியான குரோத் இருக்காது. பப்பியோட நகத்தோட சேர்ந்து நரம்பும் வளரும். இதை தெரியாம வெட்டிட்டா, ரத்தம் கொட்டும். புரொபஷனல்லான குரூமரை தேர்ந்தெடுக்கலைன்னா, உங்க பப்பி, கத்திரிக்கோல் பார்த்ததும் கத்தி ஆக்ரோஷமாகிவிடும்.புரொபஷனல் குரூமர்னு எப்படி தெரிஞ்சிக்கறது?. குரூமிங் கோர்ஸ் சேர்ந்து, முறையா டிரெயினிங் எடுத்தவங்க, ஹைப்பரா இருக்கற பப்பியையும், ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவாங்க. குரூமிங் முடிஞ்சதும், உங்க பப்பி ஜாலியா பீல் பண்ணும். சிலகுரூமர்கிட்ட,பப்பி ஒத்துழைக்கலைன்னா, ஹேர்கட் பண்ணும் போது, ஸ்கின் டேமேஜ் ஆகிடும். அப்புறம் பப்பி, ஒழுங்கா சாப்பிடாம, துாங்காம அவதிப்படும். இந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கும் ஏற்பட்டதால தான், பெங்களூருல, குரூமிங் கோர்ஸ் சேர்ந்து படிச்சேன். என்னோட ஒர்க்கிங் ஸ்டைல் புடிச்சதால தான், ஸ்பா தொடங்குன 2 வருஷத்துல, 3,000 ஹாப்பி கஸ்டமர்ஸ் கிடைச்சிருக்காங்க. ஸ்பா போக முடியாதவங்க, வீட்டுலயும் குரூமிங் பண்ணலாம். வீட்டுல பண்ணக்கூடிய பேசிக் குரூமிங் என்ன?ஹேரி ப்ரீட்ஸ் வாங்குனா, டெய்லி சீவிவிடணும். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை குளிப்பாட்டுறது, நகம் வெட்டுறது, காது, கண் சுத்தப்படுத்தறது அவசியம்.தேங்காய் எண்ணெய் வச்சி, பப்பிக்கு மசாஜ் செய்யணும். பப்பியோட ஸ்கின்ன தொட்டா தான், அலர்ஜி, பொடுகு இருக்குதா, பூச்சி, ஒட்டுண்ணியால பாதிக்கப்பட்டு இருக்கான்னு தெரியும். பப்பியோட பாதத்தை சுத்தமா வச்சிருக்கறது அவசியம். அதுல தண்ணீர் தேங்கிட்டா, பூஞ்சை, பாக்டீரியா தொற்று ஏற்படலாம். பாதத்துல வெடிப்பு வந்துட்டா, நடக்கவே முடியாம சிரமப்படும். இந்த மாதிரியான சூழல்ல, டாக்டர் அட்வைஸ் ரொம்ப முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை