உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அன்பை அள்ளித்தரும் நியோ நெகிழும் அமெரிக்க வாழ் தமிழ் குடும்பம்  

அன்பை அள்ளித்தரும் நியோ நெகிழும் அமெரிக்க வாழ் தமிழ் குடும்பம்  

'செல்லமே தீவிர வாசகர்கள்' என்ற வாசகத்தோடு, இ-மெயிலில் தொடர்பு கொண்டவர்கள், அமெரிக்காவின், அட்லாண்டா பகுதியில் வசிக்கும் தமிழர்களான, கவுத்தம் விஷ்வநாதன், மலர் ராமசாமி தம்பதிகள். எங்களின் செல்லக்குட்டி நியோவை பற்றி எழுதுங்களேன் என்ற கோரிக்கையுடன், நம்மோடு பகிர்ந்தவை.எங்களின் பூர்விகம் சென்னை, மந்தவெளி. நாங்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதால், வேலை நிமித்தமாக, கடந்த 2000ல் அமெரிக்காவில் குடியேறிவிட்டோம். எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்தவன் நித்தில் தற்போது பிளஸ்2வும், இளையவன் நேகன், ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். நாங்கள் இருவரும் வேலையில் பிசியாக இருப்பதால், மகன்களின் தனிமையை போக்க, பப்பி வாங்க வேண்டுமென முடிவெடுத்தோம். மகன்கள் இருவரும் டாக் லவ்வர்ஸ்.இவர்களுக்காக, ஆஸ்திரேலியன் லேப்ரடூடுல் ப்ரீட் (நியோ) வாங்கினோம். எட்டு வார பப்பியாக, வீட்டிற்கு வந்த நியோவுக்கு தற்போது, 18 மாதங்களாகின்றன. டென்னிஸ் விளையாடும் போது பந்து எடுத்து வந்து தருவது, அவுட்டிங் செல்லும் போது முந்திக்கொண்டு காரின் முன்னிறுக்கையில் அமருவது, வேலை முடித்து வீட்டிற்குள் நுழையும் போது, பாசத்தால் கட்டியணைப்பது, மகன்களுக்குள் சண்டை வந்தால் தடுப்பது என, இவனின் சேட்டைகளை பட்டியலிட்டு கொண்டே இருக்கலாம். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே மாறிவிட்டாலும், நேகன் மீது, நியோவுக்கு பொசசிவ் அதிகம். கடல்தாண்டி வேறு நாட்டில் வசித்தாலும், நியோ வீட்டிற்கு வந்தபிறகு, மனநிம்மதியோடு, பாதுகாப்பாக இருப்பதாகவும் உணர்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை