உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அது இதுக்கு... இது அதுக்கு... எது வேண்டும் உங்களுக்கு?

அது இதுக்கு... இது அதுக்கு... எது வேண்டும் உங்களுக்கு?

ஒரு பப்பி வாங்கி வளர்க்க ஆசைப்படும் முன்பு, எந்தெந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென, வாசகர்களுக்கு விளக்குகிறார், மதுரை, திருப்பரங்குன்றம், கால்நடை பல்கலை பயிற்சி ஆய்வு மைய பேராசிரியர் உமாராணி.அவரது 'அட்வைஸ்':ஒரு பப்பி வாங்கும் முன்பு, வீட்டின் இடம், சுற்றுச்சூழல், பராமரிப்புக்காக ஒதுக்கும் நேரம், நோக்கம் குறித்த புரிதல் இருப்பது அவசியம். இது தெரியாமல் வாங்குவதால் தான், பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.*சிறிய வகை நாய்களான, பொமரேனியன், லசாப்சோ, ஸ்பிட்ஸ், டச்ஷண்ட் போன்றவை வீட்டில் உள்ளவர்களிடம் எளிதில் பழகும். வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்கலாம்.*டாபர்மேன், அல்சேஷன், பாக்ஸர், ராட்வீலர் போன்ற பெரிய வகை நாய்கள், வீட்டு காவலுக்கு ஏற்றவை. இவை விளையாட போதுமான இடம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.*ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, டாபர்மேன், கோம்பை போன்ற நாய்கள் வேட்டையாடச் சிறந்தவை. தோட்டம் வைத்திருப்பவர்கள் காவலுக்கு வளர்க்கலாம்.*டால்மேசன், டாபர்மேன், லேப்ரடார், காக்கர் ஸ்பேனியல், அல்சேஷன் போன்றவை புத்திக்கூர்மையானவை. துப்பறிதலுக்கு பயன்படுத்தலாம்.*இவற்றில், நாம் வாழுமிடத்தைப் பொறுத்து தான், நாய்களை தேர்வு செய்ய வேண்டும். பெரிய வீடு, தோட்டம், சுற்றிலும் இடம் இருந்தால், பெரிய வகை நாய்களை தேர்ந்தெடுக்கலாம். நகர்ப்புறம், நெரிசலான இடங்கள், போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில், வீடுகள் இருந்தால், நாட்டு இன நாய்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை வெளியே ஓடுவதற்கு முயற்சி செய்தால், சிக்கலாகிவிடும்.*இதேபோல், பப்பியாக வாங்கினால், வீட்டிலுள்ளோரிடம் எளிதில் பழகிவிடும். இதிலும், ஆண் நாய்களை விட, பெண் நாய்கள் சற்று அமைதியானவை. இதற்கு பயிற்சி கொடுப்பதும் எளிது. பப்பிகளை விற்கும் நோக்கத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கு, பெண் நாய்களே சிறந்த தேர்வாக இருக்கும்.*பப்பி பிறந்து முதல் மூன்று மாதங்களுக்கு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை, பால் மற்றும் திட உணவு கொடுக்க வேண்டும். 5வது மாதம் வரை, தினசரி மூன்று முறையும், அதற்கு பின், ஒருநாளைக்கு இருவேளை உணவளித்தால் போதுமானது.*பப்பி வளரும்போது, தோல் பொருட்கள், ரப்பர் பந்து, செருப்பு, பேப்பர், துணி, சாக்ஸ் போன்றவற்றை கடிக்க ஆரம்பிக்கும். இதைத் தவிர்க்க கடைகளில் விற்கப்படும் நைலான் பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம்.*நாய்களுக்கு உடல் ரீதியான பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், சுயமருத்துவத்தில் ஈடுபடாமல், கால்நடை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை