'கவாஸாகி இந்தியா' நிறுவனம், அதன் மிகப்பிரபலமான 'நிஞ்சா இசட்.எக்ஸ் - 4 ஆர்.ஆர்.,' என்ற புதிய மாடல் நிஞ்சா பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியாவின் விலை உயர்ந்த 400 சி.சி., பைக்காகும்.இந்த பைக் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இதன் இன்ஜின், 'நிஞ்சா இசட்.எக்ஸ்., - 4.ஆர்.,' பைக்கில் இருக்கும் அதே 399 சி.சி., இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.அட்ஜஸ்டபிள் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன், குவிக் ஷிப்டர் வசதி, கவாசாகியின் அடையாள நிறமான ரேஸிங் பச்சை, 3 ரைடு மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஏ.பி.எஸ்., பாதுகாப்பு அமைப்பு என பல அம்சங்கள் இதில் உள்ளன.விலை - 9.10 லட்சம் ரூபாய்
விபரக் குறிப்பு
இன்ஜின் - 399 சி.சி., 4 சிலிண்டர், லிக்விட் கூல்டுபவர் - 77 எச்.பி.,டார்க் - -39 என்.எம்.,எடை - 189 கி.லோடாப் ஸ்பீடு - 241 கி.மீ.,