மேலும் செய்திகள்
நாட்டின் குறைந்த விலை கன்வெர்ட்டபிள் கார்
17-Dec-2025
வாகன அப்டேட்ஸ்
17-Dec-2025
மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழையும் வின்பாஸ்ட்
10-Dec-2025 | 1
'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், மலிவு விலையில் 'சேத்தக் 2901' மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரம்ப விலை ஸ்கூட்டர் என்பதால், சில அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.இந்த ஸ்கூட்டரின் மோட்டார் திறன் குறைக்கப்பட்டுள்ளதால், இதன் வேகம், மணிக்கு 63 கி.மீ., வரை மட்டுமே செல்லும். இதன் ரேஞ்ச் 123 கி.மீ., என்பதை பஜாஜ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.மற்றபடி, மாறாத டிசைன், 5 வெளிப்புற நிறங்கள், ஒரே ரைடு மோடு, ஸ்டீல் வீல்கள், அதே எல்.சி.டி., டிஸ்ப்ளே ஆகியவை இதில் உள்ளன. கூடுதலாக 3,000 ரூபாய் செலுத்தினால், இரு ரைடு மோடுகள், ரிவர்ஸ் மற்றும் ஹில் ஹோல்டு வசதி, அலாய் சக்கரங்கள் ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய, குறைந்தபட்சம், 6 மணி நேரம் தேவைப்படும்.விலை: - ரூ.95,998
17-Dec-2025
17-Dec-2025
10-Dec-2025 | 1