மேலும் செய்திகள்
ஒயிட் சிமென்ட் அடிக்காமல் பட்டி வைக்கலாமா?
13-Dec-2025
கான்கிரீட்டை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்களில், நீர்க்கசிவு ஏற்பட கூடாது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், கட்டுமான பணியில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக பெரும்பாலான கட்டடங்களில் மெல்லிய விரிசல்கள் காரணமாக நீர்க்கசிவு ஏற்படுகிறது. கட்டடங்களில் கான்கிரீட் தளங்களில் ஏற்படும் மெல்லிய விரிசல்கள் உடனடியாக பார்வையில் தெரியாது என்பதால் பெரும்பாலான மக்கள் இதில் அலட்சியமாக இருக்கின்றனர். மழைக்காலத்தில் இந்த விரிசல்களின் வழியே ஊடுருவும் நீர், கட்டடத்தின் உட்புறம் பரவி ஈரப்பதத்தை அதிகரிக்கும் போது தான் வெளிப்படையாக தெரியவரும். இது போன்ற மெல்லிய விரிசல்கள் வழியே நீர் புகுந்து கட்டுமானத்தின் உட்புறப்பகுதியை சேதப்படுத்தும் வரை கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் பிரச்னை பெரிதாகிறது. சில ஆண்டுகள் கழித்து பிரச்னை வெளிப்படையாக தெரியவரும் நிலையில் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்க வேண்டும். தற்போதைய நிலையில், இணையதளத்தில் தேடினால் போதும், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் வாட்டர் புரூப்பிங் பணிகளை முடிக்க உங்கள் அழைப்புக்காக காத்திருப்பது தெரியும். இதில், எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது, எப்படி அணுகுவது என்பதில் குறிப்பிட்ட சில வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். முதலில், உங்கள் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு பிரச்னைக்கான அடிப்படை காரணம் என்ன என்று ஆய்வு செய்யுங்கள். மொட்டைமாடியில் தண்ணீர் வெளியேறுவதற்கு தடையாக ஏதாவது தடுப்பு இருந்தால் அதை முதலில் அப்புறப்படுத்தி பாருங்கள்.இந்த பணிக்கு பின்னும் நீர்க்கசிவு இருந்தால், அதில் வாட்டர் புரூப்பிங் பணிகளை மேற்கொள்வது குறித்த வழிமுறைகளை நாடுங்கள். குறிப்பாக, ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வழிமுறைகளில் வாட்டர் புரூப்பிங் பணிகளைw மேற்கொள்கின்றன. தற்போதைய நிலவரப்படி, பிரதான பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில், அறிவியல் பூர்வ வழிமுறைகளை பின்பற்றி வாட்டர் புரூப்பிங் சேவைகளை வழங்குகின்றன. இதில் எந்த நிறுவனத்தின் சேவை எந்த வகையில் உங்களுக்கு ஏற்றதாக உள்ளது என்று பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், ஒரு சதுர அடிக்கு, 35 ரூபாய் முதல், 55 ரூபாய் வரை என்ற அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் இதற்கான சேவைகளை வழங்குகின்றன. இவ்வாறு ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யும் போது, கட்டடத்தில் மேல் தளத்துடன் தொடர்புள்ள அனைத்து பகுதிகளிலும் மெல்லிய விரிசல்களை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் தேர்ந்தெடுத்த நிறுவனம், வாட்டர் புரூப்பிங் பணிகளை முடித்து கொடுத்தபின் அதற்கான உத்தரவாத காலம் என்ன என்பதையும் விசாரியுங்கள். இதில் முறையான அங்கீகாரத்துடன், நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களை பயன் படுத்துவது நல்லது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
13-Dec-2025