உறுதியானது எக்கு கட்டமைப்பு கட்டடங்கள்
கட்டுமானப்பணிகளை விரைவாக முடிக்க, பி.இ.பி., என்றழைக்கப்படும் எக்கு கட்டமைப்புகள் உதவுகின்றன.நம் நாட்டில்எக்கு கட்டமைப்புகளுக்கான தேவை, பெருமளவில் வளர்ந்து வருகிறது, குறிப்பாக, அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி முயற்சிகளுக்குப் பிறகு, அவை மிகப்பிரபலமடைந்துள்ளன. பி.இ.பி.,என்றழைக்கப்படும், எக்கு கட்டமைப்புகள் உறுதியானது. அதே சமயம் செலவும் குறைவு.காரணம், சிறப்பு கணினி மென்பொருள் மற்றும் வடிவமைப்பு. பகுதி வேலைதொழிற்சாலையிலும், மீதி வேலை சைட்டிலும் செய்வதால், வேலை தாமதம் மற்றும் செலவு மிகவும் குறைவு.குறைந்த மனித உழைப்பு மற்றும் குறைந்த செலவு ஏற்படுகிறது ஆர்.சி.சி. கட்டடங்களின் காலக்கெடு, கட்டுமான தளத்தின் நிலை, கட்டுமானப் பொருட்களின் கிடைக்கும் தன்மை, கடைசி நிமிட மாற்றங்கள் வரை, பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. கட்டுமான இடம் தயாராகா விட்டாலும், எக்கு கட்டமைப்புகளின் வேலைகளை உடனேயே வேறிடத்தில் ஒரு தொழிற்சாலையில் துவங்கலாம். நேரத்தை மிச்சப்படுத்தலாம். எனவே நிறைய நேரம் மிச்சமாகும். சுமை தாங்கும் திறன்
மேம்பட்ட கணினி மென்பொருள் மூலம்,டிசைன் செய்யப்படுவதால் துல்லியமான சுமை தாங்கும் திறனைக் கொண்டு, முழு சட்டமும் உறுதியானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.கட்டுமான இரும்பு பீம்களின், சுமை தாங்கும் திறன் பாரம்பரிய கட்டுமான பொருட்களை விட அதிகம். ஆர்.சி.சி., கட்டடங்களுடன் ஒப்பிடும்போது எக்கு கட்டமைப்புகள், பூகம்பங்களை மிகவும் திறம்பட தாங்கும்.பராமரிப்பும் குறைவு. எனவே, இன்றைய சூழ்நிலைகளில்தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், நிறைய வணிகக் கட்டடங்களையும்எக்கு கட்டட முறையில் அமைக்கலாம். நேரம் மற்றும் செலவு மிச்சமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.