வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாகனங்களே இல்லாதவர்களுக்கு நிறுத்தும் இடம் எதற்கு? ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள் மன வேதனை இது
வீடு வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் போது அது தொடர்பான பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் வீட்டில் உங்களுக்கு கிடைக்கும் பரப்பளவு என்ன? நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., எவ்வளவு என்பதுடன் வாகன நிறுத்துமிடம் குறித்தும் கவனிக்க வேண்டும். நீங்கள் வீடு வாங்கும் குடியிருப்பில் கார் நிறுத்துமிட விபரங்கள் வரைபட நிலையில் விவரிக்கப்படும். அதை அப்படியே நம்பி, நமக்கு ஒரு கார் நிறுத்துமிடம் கட்டாயம் கிடைக்கும் என்று, வீடு ஒப்படைப்பு நிலையில் அலட்சியமாக இருந்தால் அது பல்வேறு குழப்பங்களுக்கு வழி வகுக்கும். கட்டுமான ஒப்பந்தத்தில், கார் நிறுத்துமிடத்துக்காக வசூலிக்கப்படும் தொகை விபரத்துடன் அது எங்கு அமைந்துள்ளது, அதன் பரப்பளவு என்ன என்பது போன்ற விபரங்களையும் குறிப்பிட வலியுறுத்துங்கள். வாகன நிறுத்துமிடம் தொடர்பான தகவல்கள் ஆவணத்தில் இடம் பெறுவது அவசியம். மேலும், குடியிருப்பு வளாகத்தில் உங்களுக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் கார் நிறுத்துமிடத்தில், உரிய அடையாள குறியீடு இருக்க வேண்டும். பத்திரத்தில் அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டுவிட்டு, கார் நிறுத்துமிடம் எது என்பதற்கான அடையாளத்தை குறிப்பிடாமல் சிலர் விடுகின்றனர். முதலில் குடியேறுபவர்கள், தங்களுக்கு வசதியான இடத்தை கார் நிறுத்துவதற்கு பிடித்துக்கொள்வர். தாமதமாக அங்கு குடியேறும் நபருக்கு பணம் கொடுத்தும் கார் நிறுத்துமிடம் இல்லாத நிலை ஏற்படும் என்பதால், இதில் மிக மிக விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வாகனங்களே இல்லாதவர்களுக்கு நிறுத்தும் இடம் எதற்கு? ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள் மன வேதனை இது