15 டிசம்பர் 2012 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
ராம் ஐ.டி, துறையில் டீம் லீடராக வேலை செய்யும் துடிப்பான இளைஞர். திறமையானவர். கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்து அலுவலக நிர்வாகத்திடம் நன்மதிப்பை பெற வெண்டும் என்று விரும்புபவர். இதனால் குடும்பத்தினரோடு ஒட்டாமல் வேலையிலேயே கவனம் செலுத்தினார். இதனால் எல்லாரையும் போல், அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை.சரியாக, 2008ல் முன் ஜனவரி, ௧8ம் தேதி என்னை சந்திக்க தன் மனைவியுடன் வந்திருந்தார். அடிக்கடி யாரோ தன் காதுக்குள் பேசுவதாகவும், தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாகவும், மீண்டும் மீண்டும் அதே எண்ணம் தோன்றுவதாகவும் இதை எப்படி தவிர்ப்பது என்று, யோசனை கேட்டு என்னிடம் வந்திருந்தார். அவரிடமும், அவர் மனைவியிடமும் பல கேள்விகளை கேட்டேன். அவர் மனைவி அழுதேவிட்டார். 'இவருக்கு எதிலும் சந்தேகம் சார். ஒவ்வொரு மாதமும் சாப்பாட்டிற்கு கூட குறைவான பணமே தருவார் கேட்டால், என்னிடமிருந்து பணம் வாங்கி நீ யாருக்கோ தருகிறாய் என்பார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் அலுவலக புராணம்தான். தன்னை மிஞ்சி தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் ஏதோ தனக்கு துரோகம் இழைக்கின்றனர் என்று புலம்புகிறார்' என்றார். எனக்கு சட்டென புரிந்துவிட்டது, ராமிற்கு இருப்பது சந்தேக நோய் ஆரம்பத்தில் இதை கவனிக்காவிட்டால், பல விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.சந்தேக நோய் எதனால் வருகிறது. ஆழ் மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவே எண்ணங்களாக உறுமாறி, மனதை சூறாவளியாக்கிவிடும். கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் மூளையில் தோன்றி, அந்த எண்ண தூண்டுதலின் பேரில், ஒரு செயலை செய்வதே சந்தேக நோய். ஆரம்ப நாட்களில் இந்நோய் தாக்கியவர்கள் சில விசித்திரமான செயல்களை செய்துகொண்டே இருப்பர். அவர்களின் எதிர்மறையான எண்ணம் அவர்களை கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். அந்த நினைவுகளிலிருந்து எப்படி விடுபடுவது என தெரியாமல் சிரமப்படுவர். இதற்கு தகுந்த மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறுவதின் மூலம் சரிபடுத்தலாம் அல்லது நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதின் மூலம் குணப்படுத்தலாம்.முறையான சிகிச்சைக்கு ராம் வரவில்லை. அவரின் நோய் முற்றிவிட்டதன் விளைவாக 2012 டிசம்பர் 5ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலோடு ராமின் மனைவி அடுத்து என்னிடம் கேட்ட கேள்வி ''ராமின் பிரச்னை பரம்பரை நோயா? என் குழந்தைகளையும் தாக்குமா?'' என்பதுதான். ''இல்லை'' என்றவுடன் நிம்மதியானார். மனிதர்கள் என்றுமே எதிர்மறையான எண்ணங்களை நினைக்கக் கூடாது என்பதற்கு ராம் ஓர் உதாரணம்.- டாக்டர். சி.சுரேஷ்,மனநல மருத்துவர்.