உள்ளூர் செய்திகள்

ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

30டிசம்பர்:இரவு 10:30 மணிஇந்நேரம், ப்ரீத்திக்கு அறுவை சிகிச்சை முடிந்து, அவளுடைய பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். அவளை சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். 21 வயது நிரம்பிய ப்ரீத்திக்கு, 'மாடலிங் துறையில் பிரகாசிக்க வேண்டும்' என்பது கனவு!நம்பிக்கையோடு வாழ்வை நகர்த்தி கொண்டிருந்தவளுக்கு, அந்த பிரச்னை வந்தது; மொத்தமாக நொறுங்கி விட்டாள்; 'என் வாழ்வு முடிந்தே விட்டது' என, தீர்மானித்து விட்டாள்! அது தீவிரமான பிரச்னைதான்; ஆனால், தீர்க்கக்கூடியதே!பாப்பிலன் லேபேப்ரி... இதை நோய் என்று கூட சொல்ல முடியாது; மரபியல் ரீதியாக 'கதப்சின் சி' எனும், குரோமோசோம் குறைபாட்டினால் வரும் பாதிப்பு! இந்த பாதிப்பை பற்றி நினைக்கும்போதெல்லாம், மனம் மிகவும் சோர்ந்து போகிறது. காரணம், மாதத்திற்கு ஐந்து முதல் ஆறு பேராவது, இதுதொடர்பாக என்னை சந்திக்க வருகின்றனர். பொதுவாக, எல்லா குழந்தைகளுக்கும் 6 - 7 வயதில், பால் பற்கள் விழத் தொடங்கும். ஆனால், பாப்பிலன் லேபேப்ரி பாதிப்பு இருப்பவர்களுக்கு, சீக்கிரமாகவே பால்பற்கள் விழுந்துவிட வாய்ப்புண்டு!பால்பற்கள் விழுந்த பிறகு, நிரந்தர பற்கள் முளைக்கும்; ஆனால், இவையும் பதினேழு, பதினெட்டு வயதிலேயே ஆட ஆரம்பித்துவிடும்; முப்பது வயதிற்குள்ளாக, அனைத்து பற்களும் விழுந்துவிடும். பொதுவாக, பற்கள் எல்லாமே தாடையிலுள்ள எலும்புகளின் பிடிமானத்தில்தான் இருக்கும். வயதாகும்போது, எலும்புகள் வலுவிழந்து உயரம் குறைய ஆரம்பித்தவுடன், பற்களின் ஆணிவேர் ஆட்டம் காணும்.'பாப்பிலன் லேபேப்ரி' குறைபாட்டை பொறுத்தவரை, அது எலும்பு பிரச்னையே தவிர, பற்களுக்கான பாதிப்பல்ல! இப்பிரச்னையில், பற்கள் அனைத்தும் உறுதியாக இருந்தாலும், பற்களை தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளின் வலுவில்லாத் தன்மை, பற்களை சாய்க்கும்.இதற்கு, நெஞ்சுக் கூட்டிலிருந்து எலும்புகளை எடுத்து, தாடையில் பொருத்தி, அவற்றில் செயற்கை பற்களை பொருத்துவதுதான் சிகிச்சை! அந்த சிகிச்சை ப்ரீத்திக்கு இன்று நடந்திருக்கிறது. அவருடைய பிரச்னை இன்றோடு தீர்ந்துவிட்டது. இனி, அவர் பழைய நம்பிக்கையுடன், சந்தோஷமாக தன் கனவுகளை துரத்தலாம்!- அரவிந்த் ராமநாதன்,பல் மருத்துவர்,மரபியல் ஆராய்ச்சி நிபுணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்