குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கேஷுவலாக சாப்பிடலாம் கேஷு!
நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள், 'நட்ஸ்' அருகிலேயே போகக் கூடாது என்பர். நட்சில் அதிக கலோரி இருப்பதால், உடல் எடை அதிகமாகும்; ரத்தத்தில் கொழுப்பை, இது அதிகரிக்கும். ஆனால், 10 ஆண்டுகளாக, 'நட்ஸ்' குறித்த ஆராய்ச்சிகள், இது தவறு என, உறுதி செய்துள்ளன. ஆனாலும், வெளிநாடுகளில், அதிகம் பயன்படுத்தும் பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவை குறித்த ஆராய்ச்சிகளே அதிகம் உள்ளன; நம்முடைய முந்திரி குறித்த ஆராய்ச்சி, வெகு சிலவே உள்ளன. முந்திரி பருப்பு குறித்த என் ஆராய்ச்சியின் முடிவு இதுதான்:வறுக்காத முந்திரியை தினமும் சாப்பிடுவதால், நல்ல கொழுப்பு அதிகரிக்கும்; இதில், ஆன்டி ஆக்சிடென்ட், இரும்பு, மெக்னீஷியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. தொடர்ந்து, 12 நாட்கள், தினமும், 30 கிராம் முந்திரி பருப்பு கொடுத்ததில், இது உறுதியாகி உள்ளது.டாக்டர் வி.மோகன், நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், சென்னை.