உள்ளூர் செய்திகள்

மறக்க முடியுமா!

பொதுவாகவே, மனிதர்களுக்கு மறதி என்ற ஒரு நிலையே இல்லை. நாம் ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம் என்றால், மீண்டும் அதனை எண்ணி ஞாபகப்படுத்த முயற்சிக்க மாட்டோம். ஒருவருக்கு ஒரு விஷயம் மனதிலே இல்லை, அல்லது அவர் ஞாபகப்படுத்த முயற்சிக்கவில்லை என்றால், அது அவரது மனதிலிருந்து அழிந்துபோன விஷயம். சரி... ஞாபக சக்தியை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ? நமது உடலில் பல சுரப்பிகள் சுரக்கின்றன. அவற்றில், பிட்யூட்டரி என்ற சுரப்பி மட்டும் தானாக வேலை செய்யாது. அதனை நாம் செயற்கையாக துண்டுவதன் மூலம்தான் செயல்படும். பிட்யூட்டரி சுரப்பிதான் நமது மூளையில் உள்ள எண்ணங்களையும், அறிவாற்றலையும் நினைவுக்கு கொண்டு வரும். நமது உடலின் மெமரி சேமிப்பு கிடங்காக உள்ள பிட்டியூட்டரி சுரப்பி, மனிதர்களின் நெற்றியின் நடுவில் உள்ளது. நெற்றியில் சாதாரணமாக அழுத்துவதன் மூலம், பிட்டியூட்டரி சுரப்பி வேலை செய்யும். இதனை வலியுறுத்த, அறிமுகமானதே நெற்றிப் பொட்டு. ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள இது ஒரு முறை. மனிதன் சராசரியாக கண் திறந்து வேலை செய்யும்போது, பெரு மூளை வேலை செய்யும். அதே கண் மூடியிருக்கும்போது, சிறு மூளை வேலை செய்யும். அதாவது, தூங்கும்போது மட்டும் சிறு மூளை வேலை செய்யும். சிறு மூளைக்கு சிந்திக்கும் திறனும், எண்ணங்களை விரைவாக நினைவுப்படுத்தும் திறனும் அதிகம். ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும், வேலைகளும், சிறு மூளையில் பதிவாகியிருக்கும். எனவே, ஒரு விஷயம் நமக்கு மறந்துவிட்டால், ஒரு நிமிடம் கண்ளை மூடி யோசித்தால், நினைவுக்கு வந்துவிடும். இதனை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால், அவர்களால் சிறு வயதிலிருந்தே, தங்கள் ஞாபக சக்தியை வளர்த்து கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்