மூச்சு விடுவதில் சிரமமா...
* என் தாயாருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு டாக்டரை சந்தித்தபோது, அவர் மூன்று பந்து பரிசோதனை கருவி மூலம் பயிற்சி செய்ய சொன்னார். எதற்காகபொதுவாக நோய்களுக்கு மருந்து மட்டுமே உட்கொண்டால் போதாது. மருந்துகளுடன் சிறிது உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். மூன்று பந்து பயிற்சி கருவி மூலம் பயிற்சி செய்தால் மூச்சு விடும் திறன் அதிகரிக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும். எனவே அந்த பயிற்சியை தினமும் செய்வது மிகவும் நல்லது.* என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. பி.சி.ஜி., தடுப்பூசி போட்டுள்ளேன். இருப்பினும் காசநோய் தொற்று உள்ளது. பி.சி.ஜி., தடுப்பூசி போட்டும் காசநோய் தொற்று வருமாபொதுவாக பி.சி.ஜி., தடுப்பூசி போட்டுக் கொண்டால் 7 வயது வரை காசநோய் தொற்று வராது. அது தீவிரமான காசநோய், அதாவது மூளைக்காசநோய் போன்ற அதிதீவிரமான காசநோய்களை தடுக்கும். சாதாரணமாக ஏற்படும் கிருமி தொற்று காசநோய் மற்றும் 'பிரைமரி காம்ப்ளக்ஸ்' போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே தொற்றுவிடும். எனவே குழந்தைகளுக்கு நன்கு ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.எனக்கு இளைப்பு நோய் உள்ளது. குளிர் காலத்தில் மட்டுமே இளைப்பு வரும். வெயில் காலத்தில் வராது. எனவே வெயில் காலத்தில் மருந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்கிறேன். இவ்வாறு செய்யலாமாஇளைப்பு நோய் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு வெயில் காலம் தவிர்த்து குளிர் காலத்தில் மட்டும் இளைப்பு வரும். அப்படி இருந்தால் நீங்கள் டாக்டரை சந்தித்து 'ஸ்பினோமெலிஸ்' எனும் பரிசோதனை செய்து அதில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிய வந்தால், மருந்து எடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம். டாக்டர் ஆலோசனை இல்லாமல் நீங்களாக மருந்து சாப்பிடுவதை நிறுத்தவோ, குறைத்துக் கொள்வதோ நல்லதல்ல..- டாக்டர் மா. பழனியப்பன்,நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை94425 24147