உள்ளூர் செய்திகள்

நோய்கள் ஜாக்கிரதை: விடிலிகோ எனும் வெண்குஷ்டம்

மறுபடி மறுபடி திரும்புகிற பார்வை, காதுபட ஒலிக்கிற கேலி, கிண்டல், உறவுகள் மட்டுமில்லாமல் நண்பர்களும் விலகிச் செல்லும் சூழ்நிலை, இவற்றை எல்லாம் விடிலிகோ எனப்படும் வெண்குஷ்டம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நேரும் சங்கடமான தருணங்கள்.வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேரை நாம் அடிக்கடி சந்தித்திருப்போம். அப்போதெல்லாம் 'பக்கத்துல போனா ஒட்டிக்கொள்ளுமோ?' என, பார்த்த நிமிடத்தில், படித்தவர்களுக்கும் கூட சின்னதாய் ஒரு தயக்கம் தோன்றும்.என்ன காரணத்தினால் இந்த வெண்குஷ்டம் வருகிறது? நம்ம சருமத்துல மெலனின் என்ற நிறமிகள் இருக்கும். இதுதான் சருமத்துக்கான கேடயம். சருமம் போதுமான அளவு மெலனினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது மெலனின் இயக்கத்தில் கோளாறு வரும்போது, இந்தப் பிரச்னை வரும்.இந்நோய்வர ஆட்டோ இம்யூன் புஸ் ஆர்ட்ரோ, அல்லது பரம்பரைத் தன்மையோ, அதீத மன உளைச்சலோ காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. நூற்றில் ஒரு சதவீதத்தினரை மட்டுமே இந்நோய் தாக்குகிறது.ஒரே நாளில் இது உடம்பு முழுக்க பரவி விடாது. கை, கால்கள், கண்களைச் சுற்றி, வாயைச் சுற்றி, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக பரவும். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்துவது சுலபம். இதன் தாக்கத்தை பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுப்படும். இது தொற்றுநோய் கிடையாது. பொதுவாக தாயிடமிருந்து, குழந்தைக்கு பரவாது. ஆனால், வரவும் வாய்ப்பு இருக்கிறது.'பாப் இசை மன்னன்' என்று சொல்லப்படும் மைக்கேல் ஜாக்சனின் உடல் மற்றும் முகத்தின் நிறத்தை கோரமாக்கியது இந்த வெண்குஷ்டம். இந்நோய்க்கு அவர் எடுத்த மருந்துகளின் பக்க விளைவுகளே அவரை நிரந்தர தூக்கத்தில் ஆழ்த்தியது.உலகம் முழுவதும் ஜனவரி 30ம் தேதி வெண்குஷ்டம் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.- ச.முருகானந்தம், சரும நிபுணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்