உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரசை ஜிங்க் தடுக்குமா?

கடந்த மார்ச் மாதம், வைரஸ் பரவலை தடுக்க, 'லாக் டவுன்' துவங்கியது. ஏப்ரல் மாதம் கூகுள் வெளியிட்ட ரிப்போர்ட்டில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்ற கேள்விக்கான தேடல், 500 மடங்கும், 'வைட்டமின் - சி, ஜிங்க்' குறித்த தேடல், 380 சதவீதமும் அதிகரித்து உள்ளது என்று கூறுகிறது.'ஜிங்க்'நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் மாத்திரைகள் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது, ஜிங்க். மருந்து விற்பனை வரலாற்றில், நம் நாட்டிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டு, 'மல்டி வைட்டமின்' மாத்திரைகள், சர்க்கரை கோளாறு மாத்திரைகளை பின்னுக்கு தள்ளி, சாதனை படைத்துள்ளது.ஜிங்க் மாத்திரைகள் தயாரிக்கும் பல கம்பெனி களின் ஜிங்க் மாத்திரையின் விற்பனை, கடந்த ஆறு மாதங்களில், 70 சதவீதம் அதிகரித்து உள்ளது.உண்மையில், ஜிங்க் மாத்திரை, கொரோனா வைரசை தடுக்கும் ஆற்றல் கொண்டதா?இது வரையிலும் யாரிடமும் தீர்மானமான பதில் இல்லை. பொதுவாக ஏற்படும் ஜலதோஷ பாதிப்பை குறைக்கும் தன்மை, ஜிங்கிற்கு இருப்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வைரசை அழிக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.அளவுக்கு அதிகமாக ஜிங்க் மாத்திரை சாப்பிடுவதால், தாமிர தாது குறைபாடு, ரத்த சோகை, நரம்புகளில் சிதைவு ஏற்படும்; ஜிங்க் ஸ்பிரே அடிக்கடி பயன்படுத்துவதால், வாசனை தெரியாமல் போகலாம்.'வைட்டமின் - சி'கடந்த மார்ச் - அக்டோபர் மாதங்களில் மட்டும், 1,267 கோடி ரூபாய்க்கு வைட்டமின் - சி விற்கப்பட்டு உள்ளது. வெறும் வைட்டமின் - சி மாத்திரைகளை சாப்பிடுவதால் மட்டும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது இல்லை என்று சொல்லும் உலக சுகாதார மைய மருத்துவ விஞ்ஞானிகள், உலகத்தில் விற்கப்படும் இணை உணவுகள், ஊட்டச்சத்து பானங்களில், 60 சதவீதம் போலியானவை என்று கூறுகிறது. வீட்டில் தயாராகும் அவரவரின் பாரம்பரிய உணவுகளை, சமச்சீரான சத்துக்கள் நிறைந்ததாக சாப்பிடுவது ஒன்று தான் சிறந்தது என்றும் சொல்கிறது.பீன்ஸ், நட்ஸ், முழு தானியங்கள், பால் பொருட்கள் இவற்றில் தேவையான அளவு ஜிங்க் உள்ளது. திராட்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை, கொய்யா போன்றவற்றில், அதிக அளவில் வைட்டமின் - சி உள்ளது. இயற்கையான வழியில் நுண்ணுாட்ட சத்துக்களை பெறுவதே நல்லது.சத்து குறைபாட்டால் பிரச்னை இருக்கிறது என்று மருத்துவ ரீதியில் உறுதியானால், தேவையான வைட்டமின் மாத்திரைகள், அவசியமான இணை உணவுகளை டாக்டர் பரிந்துரைப்பார்; நாமாகவே சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்