உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்! பெண்களின் தீராத வலி!

உலகம் முழுவதும், 10ல் ஒரு பெண்ணிற்கு எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னை இருக்கிறது. சமீப ஆண்டுகளில் பாதித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மரபியல் உட்பட பல காரணங்களை கூறினாலும், அறிவியல் பூர்வமான காரணம் தெரியவில்லை.கர்ப்பப்பையில் மூன்று அடுக்குகள் உள்ளன. அதில், கர்ப்பப்பையின் உட்புறத்தில், ஸ்பாஞ்ச் போன்ற அடுக்கிலிருந்து தான் ஒவ்வொரு மாதமும் சதையும், ரத்தமுமாக முட்டை உருவாகி, முதிர்ந்து, உடைந்து, மாதவிடாயாக வெளியேறுகிறது. சமயங்களில், உட்புற அடுக்கில் உள்ள திசுக்கள், உறைந்து, கட்டியாகி, அப்படியே தங்கி விடும்.இதுபோன்ற கட்டிகள், உட்புற அடுக்கில் மட்டுமல்ல; கருக்குழாய், கருப்பையின் வெளிப் புறம், இடுப்பெலும்புத் தசைகள் உட்பட வயிற்றில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். கருப்பையின் உட்புறத்தில் இருந்தால், மாதவிடாயின் போது, தாங்க முடியாத வலி வரும். வேறு இடத்தில் இருந்தால், அதிலும் மூன்றாம், நான்காம் நிலையில் முற்றியதாக இருந்தால், எந்த நேரத்திலும் வலி வரும். அறுவை சிகிச்சை தீர்வு கிடையாது.இந்தப் பிரச்னை இருந்தால், கர்ப்பம் தரிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. குழந்தை உண்டானால், கர்ப்ப காலத்தில், பிரச்னையின் தீவிரம் குறையும்.வலி நிவாரண மாத்திரைகள், தற்காலிக தீர்வாக இருக்கும். 40 வயதிற்கு மேல் என்றால், அறுவை சிகிச்சையில் இனப்பெருக்க உறுப்புகளை அகற்றி விடுவர். திருமணம் ஆகாத பெண்கள் கூட சமயத்தில், 'எனக்கு குழந்தை வேண்டாம்; வலியிலிருந்து, 'ரிலீப்' கிடைத்தால் போதும்; கர்ப்பப் பையை அகற்றி விடுங்கள்' என, சொல்வதும் உண்டு. அந்த அளவிற்கு பெண்களின் தீராத தலைவலி இது!டாக்டர் அமுதா ஹரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.dr_amudha@yahoo.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்