உள்ளூர் செய்திகள்

ருசிக்க மறந்த உணவுகள்

'காலை உணவை எடுத்துக் கொள்ளாத உடல்கள் எல்லாம் நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும்!' என, பண்டைய நூல்கள் சொல்கின்றன. ஆனால், தாத்தா, பாட்டியை மறந்தது போலவே, குழந்தைகள் எல்லாம் காலை உணவையும் மறந்து வெகுகாலமாகி விட்டது. இது முற்றிலும் தவறு!பொதுவாக, காலை உணவு நார்ச்சத்து உடையதாக இருக்க வேண்டும். நார்ச்சத்துடைய உணவுகள் மெதுவாக ஜீரணமாகும் தன்மை கொண்டிருப்பதால், அடிக்கடி ஏற்படும் பசி குறையும். மேலும், நார்ச்சத்துள்ள உணவுகள், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்து உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைக்கும் என்பதால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகள் மிகவும் நல்லது. இந்தவகையில், பெருமாள்கோவில் தோசை நல்ல நார்ச்சத்துள்ள உணவு!பெருமாள்கோவில் தோசை செய்வது எப்படி?தேவையானவை (4 பேருக்கு): பச்சரிசி - 3 கப், புழுங்கல் அரிசி - 1 கப், கருப்பு உளுந்து - 1 கப், சோளம்/சோள மாவு - ஒரு கைப்பிடி, பெருங்காயம் - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சுக்கு, இஞ்சி - தேவையான அளவு, நெய் - தேவையான அளவுசெய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, சோளம் இவை அனைத்தையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் பெருங்காயம், மிளகு, சீரகம், சுக்கு, இஞ்சி, கருவேப்பிலை இவற்றை நன்கு வதக்க வேண்டும். இக்கலவையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலந்தால், பெருமாள் தோசைக்கான மாவு தயார். ருசி கூட்ட, தோசையின் மேல் சிறிதளவு சுக்குப்பொடி தூவி, நெய் ஊற்றி எடுத்தால், தோசை ஜோராக மணக்கும்.- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்