ருசிக்க மறந்த உணவுகள்
'நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு என்ன... இன்னும் நாக்குக்கு கிடைக்கலையே'ன்னு, இனிப்புகளைப் பார்த்து வருத்தப்படற சர்க்கரை வியாதிக்காரங்களுக்கான உணவுதான், கேழ்வரகு அல்வா.கேழ்வரகு அல்வா செய்வது எப்படி?கேழ்வரகு 50 கிராம்கருப்பட்டி தேவையான அளவுசர்க்கரை தேவைக்கேற்பநெய் சிறிதளவுநல்லெண்ணெய் ஏலக்காய் சிறிதளவுமுந்திரி சிறிதளவு திராட்சைசிறிதளவு செய்முறை:ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கேழ்வரகை மூன்று நிமிடங்கள் வறுக்க வேண்டும். பிறகு, வறுபட்ட கேழ்வரகின் சூடு ஆறும் வரை காத்திருந்து, மீண்டும் அதை கடாயில் இட்டு, உடைத்து வைத்திருக்கும் கருப்பட்டியையும், ஒரு தம்ளர் தண்ணீரையும் ஊற்றி கிளற வேண்டும். கூடவே, கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, கட்டி விழுந்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை, அல்வா பதத்திற்கு வந்தவுடன், ஏலக்காய், முந்திரி, திராட்சை கலந்து இறக்கினால், 'கமகம' கேழ்வரகு அல்வா தயார்!பலன்கள்:கேழ்வரகில், புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் இருப்பதுடன், வைட்டமின் பி1 எனப்படும் தையமின் சத்தும் உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது. மேலும், கேழ்வரகில் உள்ள டரிப்டோபேன், அதீத பசி உணர்வை குறைக்கிறது; இதனால், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.- லீலாவதி சீனிவாசன், சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்.