ருசிக்க மறந்த உணவுகள் - காந்திமதி, ஊட்டச்சத்து நிபுணர்
நாம் உண்ணும் உணவுகள், உடலுக்கு மட்டுமல்ல... மனதிற்கும் நலம் தருவதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அவை ஆரோக்கிய உணவாக கருதப்படும். இன்றைய சூழலில், உணவின் சுவைக்கு முக்கியத்துவம் தரும் அளவிற்கு, அவ்வுணவு தரும் ஆரோக்கியம் பற்றி நாம் யோசிப்பதில்லை. எவையெல்லாம் உடலுக்கு நலம் தரும் என, நம் முன்னோர்கள் ஆராய்ந்து புசித்ததை, துரித உணவுகளின் தூண்டுதல் காரணமாக நாம் மறந்து விட்டோம். அப்படிப்பட்ட உணவுகளை, நினைவுபடுத்துவதே இப்பகுதியின் நோக்கம். இந்த வகையில், முதல் உணவாக... வரகு பருப்பு சாதம்.தேவையானவை (4 பேருக்கு)வரகு அரிசி - ஒன்றரை கிண்ணம்துவரம் பருப்பு - 1 கிண்ணம்வெந்தயம் - 1 மேஜைக்கரண்டிசின்ன வெங்காயம் - தேவையான அளவுபுளி - நெல்லிக்காய் அளவுமிளகு - 1 தேக்கரண்டிபெருங்காயம் - அரை தேக்கரண்டிகடுகு, உளுந்து, சீரகம் - தேவையான அளவுகாய்ந்த மிளகாய் - 6கருவேப்பிலை - சிறிதளவுநல்லெண்ணெய் - சிறிதளவுஎப்படி செய்வது?கடாயில் நல்லெண்ணெய் இட்டு, வரகு அரிசி, துவரம் பருப்பு, மிளகு மற்றும் வெந்தயத்துடன், மூன்று காய்ந்த மிளகாய்களை சேர்த்து வறுக்க வேண்டும். இதனுடன், பெருங்காயம் சேர்த்து, குக்கரில் வேக வைக்க வேண்டும். வெந்ததும், கலவையை கடாயில் கொட்டி, புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும். மற்றொரு கடாயில், சிறிதாக நறுக்கிய வெங்காயம், கடுகு, உளுந்து, சீரகம், மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து, நல்லெண்ணெயில் தாளித்து, வரகு அரிசி கலவையுடன் கலந்தால் 'கமகம' வரகு பருப்பு சாதம் தயார்.பலன்: வரகு அரிசி மற்றும் துவரம் பருப்புல இருந்து கிடைக்குற நார்ச்சத்தும், புரதச்சத்தும் நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க வைக்கும். புரதச்சத்து நிறைஞ்சிருக்கிற உணவுகளை எடுத்துக்கிறப்போ, அடிக்கடி பசி தொந்தரவு பண்ணாது. உணவுக்கட்டுப்பாடோட இருக்கிறவங்களுக்கு இது மிகச்சிறந்த உணவு. இதெல்லாம்விட முக்கியமா, இந்த உணவால குடல் இயக்கங்கள் சீரா இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை 'டாட்டா' காட்டிட்டு ஓடிடும்.