உள்ளூர் செய்திகள்

ருசிக்க மறந்த உணவுகள்

'100 சதவீதம் சுத்தப்படுத்தியது' என விளம்பரப்படுத்தி, பிளாஸ்டிக் உறைகளில் பாலை அடைத்து கொடுப்பது; 'இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்' என பலகை வைத்துவிட்டு, 40 நாட்களுக்கு முன் கொன்ற மீனை விற்பது என்பதெல்லாம், நம் நாட்டில் சர்வ சாதாரணம். 'இந்த அவசர உலகில் இதையெல்லாம் கண்டுகொள்ள நேரம் இல்லை' என்பது மட்டுமே, நாம் இந்த விஷயங்களுக்கு சொல்லும் சப்பை காரணம்!நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள், வாழ்நாளின் உயரத்தை உடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதெல்லாம் தவிர்க்க முடியாததுதான் என்றாலும், வாரம் ஒருமுறையாவது, நம் முன்னோர்கள் பழகிய உணவுகளுக்கு 'வணக்கம்' வைக்கலாமே!வாழைப்பூ வடை செய்வது எப்படி?வாழைப்பூ 100 கிராம்கடலை பருப்பு 50 கிராம்துவரம் பருப்பு 50 கிராம்கடலை எண்ணெய் தேவைக்கேற்பசீரகம் சிறிதளவுசிறிய வெங்காயம் 3பச்சை மிளகாய் 2கருவேப்பிலை சிறிதளவுபெருங்காயம் செய்முறைவாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி, ஊற வைத்த பருப்புகளுடன் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றை, பருப்பு கலவையுடன் சேர்த்து பிசைந்து, வடையாக தட்டி, எண்ணெயில் பொறித்தெடுத்தால், சுவைமிக்க 'வாழைப்பூ வடை' தயார்!பலன்இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட வாழைப்பூவின் சத்துக்கள், ரத்தமூலத்தை விரைவில் சீராக்குவதுடன், மலட்டுத்தன்மையையும் நீக்குகிறது. மேலும், தொடர் இருமல், கை, கால் எரிச்சல், சீதபேதி, வயிற்றுப்புண் போன்றவற்றையும் சரி செய்கிறது. மேலும், வாழைப்பூவுடன் பருப்பு வகைகளை சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகிறது.- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்