உள்ளூர் செய்திகள்

கோடிகளை அள்ளும் ஆரோக்கியம்!

காலை உணவைத் தவிர்க்கவே கூடாது; அதே நேரத்தில், ஓட்ஸ், கார்ன்பிளேக்ஸ், பாதாம், கொழுப்பு நீக்கிய பால், புரூட் ஸ்மூத்தி என்று நீண்ட பட்டியல். தொடர்ந்து, வெள்ளரி, பூசணி, ஆளி விதை என்று உலகத்தில் உள்ள எல்லா விதைகளும், காலை உணவில் இடம் பெற வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்ல, நம் சாப்பாட்டு மேஜையில் வரிசை கட்டி நிற்கின்றன.'புரதம் நிறைந்த, ஊட்டச்சத்து மிக்க இது போன்றவற்றை சாப்பிட்டால் தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்; உடல் எடையை சீராக பராமரிக்க இயலும்' என்று சொல்கின்றனர்.இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட, 'சூப்பர் பிரேக்பாஸ்ட்' புரட்சியில், 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாரம்பரிய உணவுகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று வந்தது. அவ்வளவு தான், காலை உணவு புரட்சியை பின்னுக்கு தள்ளி, 'ஹெல்த்தி, ஹெல்த்' என்ற தலைப்பில், சர்வதேச சந்தைகள் இயங்க ஆரம்பித்து விட்டன.லட்டு, மில்க் ஷேக் என்று எதை எடுத்தாலும், அதில் எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பொருட்கள் உள்ளன என்று, விற்க துவங்கி விட்டனர்.புரத பவுடர்புரத பவுடர் தங்கத்திற்கு இணையானது. புதிய செல்களை உருவாக்கி, தசைகளை வலுப்படுத்தக் கூடியது. உடல் நலத்தில் அக்கறை இருந்தால், அவசியம் தினமும் புரோட்டீன் பவுடர் கலந்து குடிக்க வேண்டும் என்று, 'யு - டியூப்' நிபுணர்கள் சொல்கின்றனர். 'வீடியோவிற்கு கீழே உள்ள தகவல்களை படித்தால், குறிப்பிட்ட பொருளை சிபாரிசு செய்வதற்கு எனக்கு பணம் தரப்படலாம்' என்ற ஒப்புதல் இருக்கும்.உண்மை என்ன?பெண்களுக்கு தினமும் சராசரியாக, 46 கிராமும்; ஆண்களுக்கு, 56 கிராமும் புரதம் தேவை. இந்த அளவை, முட்டை, பால், பருப்பு வகைகள், மீன், சிக்கன் என்று, தினசரி உணவின் வழியே பெற முடியும். ஏதாவது காரணத்தால் இந்த அளவை எட்ட முடியவில்லை எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி, தகுந்த மாற்று வழியை பின்பற்றலாம்.ஏறத்தாழ, 500 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கும் புரோட்டீன் பவுடர் வர்த்தகத்திற்கு பங்கு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கு அதிகமாக புரதம் சாப்பிடுவதால் வரும் பல உடல் பிரச்னைகள் பற்றி இவர்கள் பேசுவதேயில்லை.பிரபலமானவர்களை வைத்து விளம்பரம் செய்வதற்கு பதில், யு - டியூபில் அதிக பார்வையாளர்களை கொண்டவர்களை சொல்லச் சொன்னால், சுலபமாக மனதில் பதியும் என்பது தான், இதன் பின் உள்ள வியாபார யுக்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்