நாங்க இப்படிதானுங்க! - மாதம் மாறும் அட்டவணை!
ஏதாவது ஒரு விளையாட்டில், உங்கள் குழந்தை சிறப்பாக வர விரும்பினால், உணவு, உடற்பயிற்சி இரண்டும் குழந்தையின் விருப்பம், ஆசைக்கு ஏற்ப இருக்கக் கூடாது; உடல் தேவைக்கு ஏற்ப, பயிற்சியாளர் என்ன தருகிறாரோ அதைத்தான் சாப்பிட வேண்டும்.இதுதான் கோபிசந்த் பார்முலா! சிந்துவும், ஆறு வயதில் இருந்து அதைத்தான் செய்கிறார். தினமும், 'பேட்மின்டன்' பயிற்சியுடன், முதல் நாள், 4 கி.மீ., ஓடுவார்; அடுத்த நாள், 2.4 கி.மீ., ஓட்டப் பயிற்சி இருக்கும்; அதற்கடுத்த நாள், 10 கி.மீ., துாரம் ஓட்டப் பயிற்சி. இதுதவிர, தினமும், 100 புஷ் - அப்ஸ், 200 சிட் - அப்ஸ் செய்வார். வயிற்று தசைகளை வலிமையாக்க, ஒரு வாரத்தில் 2,400 விதமான பயிற்சிகள் செய்வார். தினமும் பயிற்சிகளுடன், யோகாவும், ரிலாக்ஸ் செய்து கொள்ள, நீச்சல் பயிற்சியும் உண்டு. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம், இதயத் துடிப்பு, உடல் எடையை கவனித்து, தேவைக்கு ஏற்ப உணவு அட்டவணை மாறும்.- பி.வி.சிந்து, பேட்மின்டன் ஆட்டக்காரர்.