உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க! : ஒரு நாளில் 40 முட்டை!

பச்சைப் பசேல் என, கண்ணுக்கு குளிர்ச்சியான தோட்டத்தின் நடுவில், ஒரு கோடியே, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளது, பிரபாசின் நவீன ஜிம். பாகுபலி பட, 'ரிலீசு'க்கு பின், உலகம் முழுவதும் தெரிந்த நடிகராகி விட்ட பிரபாஸ், 'ஏசி' ஜிம்மில் வொர்க் - அவுட் செய்வதை விரும்புவதில்லை. 'இயற்கையான சூழலில், வெட்ட வெளியில் உடற்பயிற்சி செய்யும் போது, சுத்தமான காற்று, நுரையீரல் முழுவதும் நிரம்பி, புத்துணர்வைத் தரும்' என்கிறார். வேறு எந்தப் படத்திலும், 'கமிட்' ஆகாமல், பாகுபலி படத்துக்காக, ஐந்து ஆண்டுகள் வேலை செய்த போது, இயல்பான தன்னுடைய, 82 கிலோ உடல் எடையை, இன்னும், 20 கிலோ அதிகரித்துள்ளார். தசைகளில், அதிக கவனம் செலுத்தும் பிரபாஸ், தினமும் ஆறு மணி நேரம், வொர்க் - அவுட் செய்கிறார். சைக்கிளிங், ரன்னிங் தவறாமல் செய்வதுண்டு. வாலிபால் விளையாட மிகவும் பிடிக்கும். 'டயட்'டில், தினமும், 40 முட்டை வெள்ளைக் கரு, புரோட்டீன் பவுடர், பச்சைக் காய்கறிகள், மீன், நட்ஸ் இடம் பெறுகிறது.- பிரபாஸ், தெலுங்கு நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !