உள்ளூர் செய்திகள்

கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செம்பருத்தி டானிக்!

வீ ட்டிலேயே வளர்க்கப்படும் பூக்களில் ஒன்று வெள்ளை நிற செம்பருத்தி பூக்கள். மூன்று செம்பருத்தி பூக்களின் இதழ்களை தனியே எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளராக குறைந்ததும், வடிகட்டி அப்படியே குடிக்கலாம். இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால், நாட்டுச் சர்க்கரை, தேன் சேர்த்துக் கொள்ளலாம். பால் சேர்த்து குடிப்பதுதான் பிடிக்கும் என்றால், ஒரு டம்ளர் நீரில் அரை டம்ளர் பால் சேர்த்து, அதில் மூன்று வெள்ளை செம்பருத்தி இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து ஒரு டம்ளராக குறைந்ததும், வடிகட்டி குடிக்கலாம். என்ன பலன்? கருப்பை ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்; ரத்த ஓட்டத்தை சீராக்கும். கழிவுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான கரு முட்டைக்கு உதவும். மிகச் சிறந்த கருப்பை டானிக்காக இது செயல் படுகிறது. குழந்தையின்மை பிரச்னை இருக்கும் பெண்கள் தொடர்ந்து காலையில் முதல் உணவாக இதைக் குடிக்கலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த தேநீரை அவசியம் எல்லாப் பெண்களும் குடிக்க வேண்டும். டாக்டர் ஆர்.மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை 99622 62988 drmythilliayur@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !