உள்ளூர் செய்திகள்

பார்த்"தேன்; ரசித்"தேன்!

தேன். இயற்கை அளித்த இனிய வரம். எழுபது வகையான சத்துகளும், வைட்டமின்களும் இதில் உள்ளன. சத்துக்கள், சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்படுகின்றன. தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனை சேகரித்ததோ, அந்த செடியின் மருத்துவக் குணம் இதில் இருக்கும். பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயு தொல்லை, ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, சுத்தம் செய்யும் தன்மை, தேனில் உள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்து தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என, ஏழு வகை தேன்கள் உள்ளன. இவற்றின், மருத்துவக் குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில், மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும்; இத்தேனை, மருந்துடன் சேர்ந்து உண்பது உகந்தது.மருந்தில் தேன் கலந்து கொடுப்பதால், ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்படும். ரத்த ஓட்டத்தில், மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல், மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர், இடையிடையே, தேன் கலந்த பானங்களை பருகினால், உற்சாகம் கிடைக்கும். இதில் உள்ள குளுக்கோஸ் சத்து, சிறிய ரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீட்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !