காபி குடிப்பது நல்லதா கெட்டதா?
தென் மாநிலங்களில் தான், டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் காபி குடிப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படுகிறது. காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான, 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், முட்டு வலி ஏற்படும் என்றெல்லாம், பல பீதிகளை இன்னமும் கூட சொல்லி வருகின்றனர். ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும், இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. காபி குடித்தால், முளை சுறுசுறுப்படையும் என்பதால் படிக்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க, காபி குடிக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர்களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.