குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - உடல் பருமனால் குழந்தைகளுக்கு பாதிப்பா?
அதிக உடல் பருமன் உடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறவிக் கோளாறுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். ஸ்வீடன் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், அதிக உடல் பருமனுடன் இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, இதயக் கோளாறுகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர, கண்கள், ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பெண் குழந்தைகளை விடவும், ஆண் குழந்தைகளே, உடல் பருமன் அதிகம் உள்ள அம்மாவால் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும், 18 வயதிலிருந்து, 30 வயதிற்குட்பட்ட பெண்களில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை, 3.5 கோடியில் இருந்து, 10 கோடியாக அதிகரித்து உள்ளது. இது, 2010 வரை எடுக்கப்பட்ட கணக்கு. அதன் பின் உள்ள ஏழு ஆண்டுகளில், மூன்றில் ஒருவர், உடல் பருமன் கொண்டவராக இருப்பதால், குண்டு பெண்களின் எண்ணிக்கை, பல கோடியாக அதிகரித்து உள்ளது.