உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இந்தியாவும் வேண்டாம்; வெளிநாடும் வேண்டாம்!

பிஸ்கட் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தங்கள் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்; பெரும்பாலான மக்களை எளிதில் சென்றடைய வேண்டும் என, செயல்படுகின்றனர். பிஸ்கட், பேக்கரி பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பெரும்பாலும், 'ஹைட்ரோஜெனேடட்' எண்ணெய் உள்ளது. இது, உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. தொடர்ந்து, இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது, உடல் பருமன் கூடுவதுடன், தற்போதுள்ள நோய்களான கேன்சரில் துவங்கி, இதய நோய்கள், நீரிழிவு வரை அனைத்து பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே, துரித உணவுகள் எதுவானாலும், அது சமோசா போன்ற இந்திய உணவாக இருக்கட்டும்; பீட்சா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு களாக இருக்கட்டும்; அதை தவிர்ப்பது பாதுகாப்பானது. வீட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய நொறுக்குத் தீனி நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !