உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!

நலம் தரும் மருத்துவம்!இடுப்புச் சுற்றளவு சராசரியாக, பெண்களுக்கு, 80 செ.மீ., ஆண்களுக்கு, 90 செ.மீ., இருக்க வேண்டும். உடல் எடை மீதும், ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இவை கூடுவது போல தோன்றினால், நன்றாக நடக்க வேண்டும்; உணவைக் குறைக்க வேண்டும்; முழுவதும் தவிர்க்கக் கூடாது.எந்தக் காரணம் கொண்டும், நொறுக்குத் தீனிக்கு ஆசைப்படக் கூடாது. பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக் கடலை, மைக்ரோவேவ் அடுப்பில் பொரித்த வற்றல், வடாம் போன்றவற்றை, அளவு மிகாமல் உண்பதால், நொறுக்குத் தீனி சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்; அதேநேரம், உடல் எடை ஏறாது. எடை குறைய, ஜிம் செல்வது முழுமையான பலன் தராது. எடை குறைவது போல குறைந்து, மீண்டும் ஏறி விடும். அதிலும், ஜிம் செல்வதை திடீரென நிறுத்திவிட்டால், முன்பைக் காட்டிலும் அதிக உடல் எடை ஏறும் வாய்ப்பு உள்ளது. ஜிம் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே நன்றாக வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது, திட உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை, உணவு இடைவேளையில் சாப்பிடலாம்.டாக்டர் கீதா சுப்ரமணியன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்