உள்ளூர் செய்திகள்

புதுப்புது அர்த்தங்கள்: நண்பனோடு சண்டையிட்டால் சந்தோஷமே!

நண்பன் என்பவன் யார்? தனக்காக எதையும் செய்பவன்; அதாவது, பிரதிபலன் பாராமல், எதையும் செய்பவன்தான் நண்பன். 'நண்பனுக்காக புகைப்பிடித்தேன்; நண்பனுக்காக நியாயம், தர்மத்தை மீறினேன்' என்பதெல்லாம் இதனால்தான்!பள்ளியின் ஆசிரியரை சந்தித்தால், 'நண்பர்களால் இவன் படிக்கவில்லை' என்று கூறுவார். காவல்துறை அதிகாரியோ, 'நண்பர்களின் தூண்டுதலினால் இத்தவறை செய்தான்' என்பார். பெற்றோரைக் கேட்டால், 'நண்பர்களால் தான் இவன் கெட்டு குட்டிச்சுவராகிப்போனான்' என்பர். இவற்றையெல்லாம் உற்றுப்பார்க்கும் போது, 'நட்பு அவ்வளவு மோசமானதா? நண்பன் அவ்வளவு கேவலமானவனா?' என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்! இந்த இடத்தில்தான், நாம் சிந்திக்க வேண்டும்.நம் நலனில் அக்கறை கொள்பவனும், வளர்ச்சியில் ஆர்வம் காண்பிப்பவனும் தான் நண்பன் ஆவான்! நண்பன் பாதை மாறும்போது, அவனை நல்வழி மற்றும் நேர்வழியில் செலுத்துபவன் தான் நண்பனாவான்! கண்மூடித்தனமாக ஒத்துழைப்பு தருவதற்கு பெயர் நட்பல்ல. ஆரோக்கிய வழிகளில் இலக்கை அடைந்து, சாதனை படைப்பதற்கு துணை நிற்பதே நட்பு!எனவே, தகுந்த காரணங்களுக்காக நண்பனோடு சண்டையிடுங்கள்; சண்டை போட்டு சந்தோஷப்படுங்கள்; இதனால், அச்சமயத்தில் நட்பை இழந்தாலும் தவறில்லை! ஆனால், நண்பனை மட்டும் இழந்து விடக் கூடாது. அதில் கவனமாய் இருங்கள்!-மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்