உள்ளூர் செய்திகள்

காதுகளை கொஞ்சம் கவனி!

தாய் கருவுற்றபோது ஏற்படும் தொற்று, கருவில் உள்ள குழந்தையின் உள்காதைப் பாதிக்கலாம். தாய்க்கு ஏற்படும் நோய்களும் தாய்மைப்பேற்றின்போது உட்கொள்ளும் மருந்துகளும் கருப்பையில் உள்ள குழந்தையின் காதுகளை மந்தப்படுத்தும். குறிப்பாக அம்மை, டைபாய்டு, நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களால் இந்த நிலை ஏற்படலாம்.குறைமாதத்தில் குழந்தை பிறந்தாலும், பிரசவவலி எடுத்து அதிகநேரம் கழித்துப்பிறந்தாலும், மூக்கு அடைபடுவதாலும் குழந்தையின் காது மந்தமாகலாம். காதுகளில் பூச்சிகள் நுழைவதாலும், கிருமிகளின் தாக்குதலாலும், சில மருந்துகளின் நச்சுத்தன்மையினாலும், வைட்டமின் பி12 குறைபாட்டினாலும் வயதான காலத்தில் உட்காது உறுப்புகளின் தேய்மானத்தினாலும் உட்காதின் நத்தை எலும்பில் அதிக நிணநீர் தேங்கும் போதும் உட்காதின் ரத்த ஓட்டம் குறையும்போதும்; காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவிட்டுத்தன்மை ஏற்படுகிறது.சிறிய பூச்சிகள் காதினுள் சென்றுவிட்டால் வெளிவர இயலாமல் உள்ளேயே அங்குமிங்கும் அலைந்து கடிக்கின்றன. இதனால் வேதனை ஏற்படுகிறது முதலில் எண்ணெய் போன்ற திட திரவத்தைக் காதினுள் ஊற்றி பூச்சியை மூச்சுத் திணரவைத்துக் கொன்றுவிட வேண்டும். பின்னர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து இறந்த பூச்சியை இலகுவாக எடுத்து விடலாம்.இவை தவிர ஒவ்வாமைக் காரணமாகவும் செவியினுள் அரிப்பு ஏற்படலாம். விட்டு விட்டு வலி ஏற்படுதல், நீர்போன்ற திரவம் வெளியாதல் ஏற்படலாம். இந்நிலையில் செவியைச் சுத்தம் செய்து மருந்துகளை விடவேண்டும்.வெளிச்செவிச் சூழலின் அழுக்கு நீர்ச்சுரப்பிகளும் எண்ணெய் சுரப்பிகளும் சேர்ந்து சுரக்கும் கலவைக்கு மெழுகுத்திரவம் என்பது பெயர். வெளிச் செவியின் பாதுகாப்புக்காக இயற்கையில் சுரக்கும் திரவம் இது. இதுவே செவியினுள் பெருமளவு தேங்கி அடைப்பு ஏற்பட்டது போன்ற உணர்வு, குறைவாகக் கேட்கும் தன்மை, மெழுகு இருக்குமிடத்தில் உறுத்துவது போன்ற உணர்வு முதலியவை தோன்றும். இந்நிலையில், அழுக்குகள் கரையும் படியும் மிருதுத் தன்மை அடையும் படியும் சொட்டு மருந்துகளைச் சில நாட்கள் உபயோகித்து பின்னரே எடுக்க முயற்சிக்க வேண்டும். வேகமாக மூக்கைச் சிந்துவதால் செவிப்பறை கிழிய வாய்ப்புள்ளது. அதனால் மூக்கை சிந்தும்போது ஒரு பக்கம் மட்டும் மூக்கை அடைத்துக் கொண்டு சிந்துதல் வேண்டும். ஆகவே காதுகளை கவனிப்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம்.காதுவலியை காதும் காதும் வைத்த மாதிரி போக்க என்ன வலி?கடுமையான காதுவலிக்கு ஐந்தாறு துளி வெள்ளைப் பூண்டு சாற்றை காதினுள் விட்டால் உடனே காதுவலி தீரும்.காதினுள் புழுக்கள் இருந்தால் அல்லது காதுவலி இருந்தால் சில துளி காடியை (விநிகர்) காதினுள் விட்டால் புழுக்கள் செத்துவிடும். காது வலியும் குணமாகும்.சரக்கொன்றைப்பூவை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி 2 சொட்டுகள் காதில் இட உடனே காது நோய் குணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்