உள்ளூர் செய்திகள்

நினைவாற்றல் வளர்க்கும் மிளகுப்பால்

சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் திரிகடுகம் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சித்த வைத்தியம், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில், இவை மூன்றும் முக்கிய மருந்து பொருளாக பயன்படுகிறது. பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு, விஷ முறிவுத்தன்மை கொண்ட உணவு பொருளாக விளங்குகிறது. இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன, இவை நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு ஆகியவற்றை அகற்றி, நரம்புகளுக்கு ஊக்கமளிக்கிறது. உமிழ்நீர் அதிகம் சுரக்கவும், உணவும் நன்கு செரிக்கவும், ஜீரணக் கோளாறுகள் உடனே குணமாகவும் மிளகு பயன்படுகிறது. ஜலதோஷம் போக்கும்தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால், இருபது கிராம் மிளகுத்தூளை, பாலில் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம், மூன்று நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும். ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலும் பறந்து விடும். சாதாரண ஜலதோசத்திற்கும், காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில், ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து, இரவில் ஒரு வேளை அருந்தினால் நல்ல பலன்கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும் மிளகுப்பால்சோம்பல், மந்தம் மற்றும் ஞாபக மறதி உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டித் தேனில், ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டால், சோம்பல் மறைந்துவிடும். மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆண்மைக் குறைபாடு மற்றும் பெண்மைக் குறைபாடு உள்ளவர்கள், தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன், ஆறு மிளகையும் தூளாக்கி, பாலுடன் கலந்து இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் நீங்கி குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.பல்வலி போக்கும் பல்சொத்தை, பல்வலி, உடல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்து பல்துலக்கி வந்தால் பிரச்னை தீரும். விஷ முறிவுக்கு மிளகு எல்லாவித விஷங்களுக்கும், ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வந்ததால், சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து, லேசாக இடித்து, நீரில் கொதிக்கவைத்து, வடித்த நீரை குடித்துவந்தால், மருந்து மற்றும் உணவுப் பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும். முடி உதிரும் பூச்சிவெட்டுசிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து, மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முடி முளைக்கும். மிளகுத்தூள், வெங்காயம், உப்பு இவற்றை கலந்துஅரைத்து, புழுவெட்டு உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர, முடி முளைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்