சீனியர் சிட்டிசன்கள் வெயில் காலத்தில் பத்திரம்
''நமக்கு வெயில் அடிச்சா வியர்க்கும், ஆனா வயசானவங்களுக்கு அந்த வியர்வை சுரப்பிகள் கொஞ்சம் ஸ்லோ'ஆகிடும். அதனால அவங்க உடம்பு சீக்கிரம் சூடாகிடும்; தோல் சீக்கிரம் காஞ்சு போயிடும். இதனால தோல் பராமரிப்புல கொஞ்சம் கூடுதலா கவனம் வேணும்,'' என்கிறார், கோவை அரசு மருத்துவமனை டாக்டர் ரேவதி.அவர் அளித்த டிப்ஸ் இதோ!* தாகம் வரும் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. பாட்டில் கையோடு வைத்து அடிக்கடி குடிக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம்.* குளித்த உடன், லேசான ஈரம் இருக்கும் போதே மாய்ஸ்ச்சுரைசர் தடவிக்கொள்ளலாம். ஈரப்பதம் மிக முக்கியம். * தளர்வான மெல்லிய காட்டன் துணிக்கு மாறிவிட வேண்டும். * வேர்க்குரு, அரிப்பு, வறட்சி பிரச்னை இருக்கும் என்பதால், ஒரு நாளைக்கு இரண்டு முறை உடம்புக்கு மட்டும் குளிக்கலாம். அதிக பழங்கள், காய்கறி, மோர், இளநீர் எடுத்துக்கொள்ளலாம். * காலை, 11 முதல் மதியம் 3-4 மணி வரை வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர், குடை, தொப்பி மறக்காதீர்கள்.* சன் ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள்.