உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

1கணையம் என்பது என்ன?உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு.2 கணையம் பாதிக்கப்படுவது எதனால்?'காக்காக்ஸி' எனும் ஒரு வகை வைரஸ், மஞ்சள் காமாலை, அம்மை வைரஸ், 'ருபல்லா' வைரஸ் முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று, கணையத்தை நேரடியாக தாக்கும்போது, 'நீட்டா செல்கள்' முழுவதுமாக அழிந்து, கணையம் பாதிக்கப்படுகிறது.3 கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா?பொதுவாக, நாம் உணவு சாப்பிடும் போதெல்லாம், உடலுக்கு தேவையான, இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிது கூட சுரக்கா விட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, அல்லது சுரந்த இன்சுலின், சரியாக வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு நோய் வரும்.4 கணைய அழற்சி எதனால் வருகிறது?கணையத்தில் சுரக்கும், செரிமான நீர் கடுமையானது. இயல்பை மீறி, அது கணையத்தில் தேங்குமானால் கணையத்தையே அழித்துவிடும். அந்த செரிமான நீர், உடனுக்குடன், முன் சிறுகுடலுக்கு சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கணைய அழற்சி ஏற்பட்டு, கணையம் பாதிக்கப்படும்.5 மது அருந்துவோருக்கு, கணையம் பாதிக்கப்படும் என்பது உண்மையா?அளவுக்கு அதிகமாக, மது அருந்துவோருக்கு கணைய குழாயில், ஒருவகை புரதப்பொருள் படிந்து, நாளடைவில் அந்த குழாயை அடைத்துவிடும். அப்போது, கணையத்தில் சுரக்கும், செரிமான நீர், கணையத்தில் தேங்கி கணையத்தில் உள்ள செல்களை அழித்து, கணையத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும்.6 கணையம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள்?கடுமையான வயிற்றுவலி துவங்கும். இந்த வலி, மேல்வயிற்றில் துவங்கி, முதுகுக்கு பரவும். சிலருக்கு தொப்புளை சுற்றி வலி இருக்கலாம்.7 கணையம் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள் உள்ளனவா?பாதிப்பிற்கான மூலகாரணத்தை அறிந்து, சிகிச்சை தரும்போது நோய் குணமாகிவிடும். ஆனால் கணையம் அழுகிவிட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படும்.8 கணையத்தில் புற்றுநோய் வருமா?அதிகப்படியான, மது மற்றும் புகைப்பழக்கத்தால், கணையத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு எதற்கும் கட்டுப்படாது. அதனால் புகைப்பழக்கம், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.9 உடல் பருமன் கூட கணையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாமே?உடல் பருமனாக இருப்போருக்கு, இன்சுலின் தேவை அதிகரிக்கும். கணையம் நிறைய இன்சுலினை சுரந்து, சுரந்து, நாளடைவில் களைத்து விடும். விளைவாக, ஒருகட்டத்தில், கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போய், நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.10 கணையத்தை காப்பது எப்படி?மது அருந்துவதை, தவிர்க்க வேண்டும். பித்தப்பை கற்கள் வராமல் கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை, அம்மை, 'ருபல்லா' போன்ற நோய்களுக்கு, குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடங்களாவது, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.- ச. கணேச மூர்த்தி, பொது மருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்