உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க!: அளவோடு பேசினால், அதிக நேரம் பாடலாம்!

தியானம், அளவான பேச்சு இரண்டும் எப்போதும் நான் கடைப்பிடிக்கும் விஷயங்கள். கச்சேரி இருக்கும் நாட்களில், உறவினர்கள், நண்பர்களுடன் பேசுவதை, முடிந்த அளவு தவிர்த்து விடுவேன்; வீட்டிலும், அவசியம் இருந்தால் மட்டுமே பேசுவேன். மனதை அமைதியாக வைத்திருப்பது மிக முக்கியம் என்பதால், தவறாமல் தியானம் செய்கிறேன். மனம் அமைதியாக இருந்தால், நிறைய சக்தியை சேமித்து பாடும் போது, மொத்தமாக பயன்படுத்த முடியும். மேடையில், நூற்றுக்கணக்கானவர்கள் முன் பாடும் போது, எனக்கு நானே கட்டுப்பாடுடன் இருந்து, என்னை நான் உணர வேண்டும்; அப்போது தான் தன்னம்பிக்கையுடன் பாட முடியும். அதற்கு, தியானம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது! மனதை அமைதியாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, உடல், 'ரிலாக்சேஷன்' மிக முக்கியம். தினமும், 45 நிமிடங்கள் நடைபயிற்சி தவறாமல் செய்வேன்; மியூசிக் சீசனில் மட்டும், 20 நிமிடங்கள் நடப்பேன். அதிக நேரம் வெளியில் நடந்தால், துாசி, குளிர், குரலை பாதிக்கும் என்பதால், கச்சேரி இருக்கும் நாட்களில், வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். இனிப்பு சாப்பிடுவதையும் தவிர்த்து விடுகிறேன்.- அருணா சாய்ராம், கர்நாடக இசைக் கலைஞர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்