நாங்க இப்படிதானுங்க!
கிரிக்கெட் வீரர்களில், தான் தான் இன்னமும், 'பிட்' என, நிரூபித்து உள்ளார், 38 வயது தோனி. மொகாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு முன், 'வார்ம் - அப்' உடற்பயிற்சியைத் தொடர்ந்து, 100 மீட்டர் ரன்னிங் நடந்தது. இதில், தன்னை விட, 12 வயது இளையவரான ஹார்த்திக் பான்டியாவை முந்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், தோனி. அடுத்த உலக கோப்பையையும் வெல்வதற்கான உடல் தகுதியுடன் இருக்கும் தோனி, ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுப்பு உடலுக்குத் தேவையோ, அதற்கேற்ப, 'டயட்'டை திட்டமிடுகிறார்.கூர்மையான கண் பார்வை, கவனம், பாதங்களுக்கு வலிமை தருவதால், கால்பந்து தினமும் ஆடுவார். 'தினமும் நான்கு லிட்டர் பால் குடிப்பார்' என்ற தகவலை மறுக்கும் தோனி, 'எனக்கு பால் பிடிக்கும்; தினமும் ஒரு லிட்டர் குடிப்பேன். 'இதனால், என் உடலுக்கு போதுமான அளவு கால்ஷியம் கிடைத்து, எலும்புகள் வலுவாக உள்ளன' என்கிறார்.பாலில், கால்ஷியம் தவிர, வைட்டமின்கள், 'டி, பி12, ஏ, புரதம், பொட்டாஷியம், மெக்னீஷியம்' போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது என்பது தோனியின் வாதம்.வந்தேன்டா பால்காரன்!- எம்.எஸ்.தோனி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்.