உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / குரங்குகளுக்கு உணவளிக்கும் குற்றாலம் கணபதி.

குரங்குகளுக்கு உணவளிக்கும் குற்றாலம் கணபதி.

குரங்குகளுக்கு உணவளிக்கும் குற்றாலம் கணபதி.காக்கை குருவி எங்கள் ஜாதிநீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்க களியாட்டம்இந்த பாடலின் முதல் வரியின் மூலம் உலக மகாகவி பாரதி சக ஜீவராசிகளை எந்த அளவிற்கு நேசித்து இருக்கிறார் என்பது புலப்படும்.காக்கை குருவி மட்டுமல்ல மரத்திற்கு மரம் தாவும் குரங்குகளும் என் இனம்தான் என அன்புகாட்டி வருகிறார் குற்றாலம் கணபதி.தென்காசியைச் சேர்ந்த கணபதி கடுமையான உழைப்பாளி, மூடை துாக்கும் தொழிலாளியாக முப்பதாண்டுகள் வேலை பார்த்துவந்தார். ஒரு நாள் கனமான மூடை ஒன்று சரிந்து முதுகில் விழுந்ததில் முதுகுத்தண்டு பாதித்து சுமைகள் சுமக்கமுடியாதவராகிப் போனார்.ஆனாலும் வாழ்க்கையும் குடும்பமும் இருக்கிறதே.இவரது இந்த நிலையினை கேள்விப்பட்டு குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிர்வாக அதிகாரி செருப்பு பாதுகாக்கும் தற்காலிக ஊழியர் வேலை போட்டுக்கொடுத்தார். ஒரு நாள் ஊதியம் நுாற்றைம்பது ரூபாய்.லட்ச ரூபாய் சம்பளம் வந்தாலும் பத்தாது என்று சொல்லி புலம்பியும் கையூட்டும் வாங்கும் நம் சமூகத்தில் நுாற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கினாலும் இந்த சம்பளத்தில் இருபது ரூபாய்க்கு இங்குள்ள குரங்குகளுக்கு உணவு வாங்கிப்போட்டு வருகிறார்.குற்றாலம் என்றாலே அருவிக்கு பிறகு குரங்குகள்தான் நினைவிற்கு வரும் சீசன் இல்லாத நேரத்தில் வெறிச்சோடிக் காணப்படும் குற்றாலத்தில் உணவிற்காக இந்த குரங்குகள் அலைமோதுவதை பார்த்திருக்கிறார்.அதிலும் ஊனமுற்ற, கூட்டத்தால் விரட்டிவிடப்பட்ட,தாயை தவறவிட்ட குட்டிக்குரங்குளின் நிலமை பரிதாபமாக இருக்கும்.இவைகளைப் பார்த்த கணபதி இவைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலையை வாங்கிக் கொண்டுவந்து அவைகள் இருக்கும் இடத்தில் கொண்டு போய் போட்டுவந்தார்.நாளடைவில் இவர் வந்தாலே உணவு வருகிறது என்று தெரிந்து கொண்டு இவரோடு பாசமாக பழக ஆரம்பித்தன.இப்போதெல்லாம் இவர் இருக்கும் இடத்திற்கே தேடிப்போய் இவரது பைக்குள் கையைவிட்டு அங்கு இருக்கும் கடலை பொட்டலத்தை பிரித்து எடுத்து சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டன.வாரத்தின் எழுநாளும் காலை மாலை என இரண்டு வேலை குரங்குகளுக்கு உணவு வழங்குகிறார்.கோவில் நடை திறந்திருக்கும் நேரம் மட்டுமே இவருக்கு வேலை நேரம் மற்ற நேரம் ஒய்வு நேரம்தான்,அந்த ஒய்வு நேரத்தை குரங்குகளுக்கு உணவு வாங்கவும், வழங்கவும் பயன்படுத்துகிறார்.குரங்குகளுக்கான இவரது இந்த உணவு சேவையைப் பார்த்து பொதுமக்கள் சிலரும் பணமாகவோ பொருளாகவோ குரங்குகளுக்கு உணவு வாங்கித்தரச்சொல்லி கொடுத்து வருகின்றனர்.யாரும் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை, எனக்கு பசிக்கிறது என கேட்க முடியும், இந்த குரங்குகள் யாரிடம் போய் கேட்கும்? என்னால் முடிந்ததை முடிந்த காலம் வரை செய்துவிட்டு போகிறேன் என்று சொல்லும் கணபதியிடம் பேசுவதற்கான எண்:9791419265.-எல்.முருகராஜ்dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை