10 வயது கானுயிர் புகைப்படக் கலைஞர்
பஞ்சாபைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு 10 வயதுதான் ஆகிறது. இங்கிலாந்தில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் (Natural History Museum) நடத்திய புகைப்படப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 'வைல்ட்லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்' (Wild Life Photographer of the Year) விருதை வென்றிருக்கிறார். பெரிய குடிநீர்க் குழாயை வாழ்விடமாகக் கொண்ட ஆந்தைகளைப் படம்பிடித்து, அதனை குழாய் ஆந்தைகள் (Pipe owls) என்ற பெயரில் காட்சிப் படுத்தினார். இந்தப்படத்துக்குத்தான் விருது கிடைத்துள்ளது.இவரது அப்பா ரந்தீப் சிங்கும் புகைப்படக்காரர். அர்ஷ்தீப் எடுத்த பல படங்கள் ஏற்கெனவே தேசிய, ஆசிய அளவிலான பல விருதுகளை பெற்றுள்ளன.