உள்ளூர் செய்திகள்

தெருவிற்கு வந்த வானவில்

வானவில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் அழகு. அந்த வானவில்லே தரையிறங்கி வந்துவிட்டதாம். எங்கு? உறையூரில். எப்படி வந்தது? அதற்கு முன் கீழ் உள்ள பாடலைப் படியுங்கள்.'மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச்சால மருவியதோர் தன்மைத்தால் - காலையேவில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்பொற்பார் உறந்தை அகம்'முத்தொள்ளாயிரப் பாடல் இது. இந்தப் பாடல் என்ன சொல்கிறது? மாலை கட்டி விற்கிற பூ வியாபாரிகள் உறைந்தையில் அதிகம். காலை நேரத்தில் பூக்கடைகளைத் திறந்து மாலை தொடுக்கிறார்கள். வேண்டாத சில பூக்களை தெருவிலே எறிகிறார்கள். அவ்வாறு எறிந்த பூக்கள் பல்வேறு நிறம் கொண்டவையாக இருக்கின்றன.அந்த பல்வேறு நிறப் பூக்கள் ஒன்றை ஒன்று ஒட்டிக்கிடப்பது, வானவில் பூமிக்கடியில் வந்து வீதியில் படுத்திருப்பது போல் தோன்றுகிறதாம்.உங்கள் மனக்கண்ணில் அழகாகத் தோன்றுகிறதா உறையூர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !